ETV Bharat / state

சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் வெளியூர் பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு

author img

By

Published : Dec 22, 2020, 2:43 PM IST

சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் ஆருத்ரா தரிசனத்தின் போது வெளியூர் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என கடலூர் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சிதம்பரம் நடராஜர் ஆலயம்
சிதம்பரம் நடராஜர் ஆலயம்

கடலூர்: கடலூர் மாவட்டத்திலுள்ள உலகப் புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் மார்கழி மாதத்தில் ஆருத்ரா தரிசனம் வெகு சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். இதை முன்னிட்டு நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கிய இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வான ன தேர் திருவிழா வரும் 29ஆம் தேதி நடைபெறுகிறது.

கரோனா பரவல் காரணமாக கோயிலின் ஆருத்ரா தரிசனத்திற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன் படி, வெளியூரைச் சேர்ந்த பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 10 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள், 65 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு அனுமதி இல்லையெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருவிழாவின் போது மூன்று தேர்களை வடம்பிடித்து இழுக்க மொத்தமாக 200 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் எனக் கூறப்பட்டுள்ளது.

சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் ஆருத்ரா தரிசனம்

கோயில் நிர்வாகத்தின் இந்த புதிய கட்டுப்பாடுகளின் படி இம்முறை உள்ளூரைச் சேர்ந்த 200 நபர்கள் மட்டுமே கோயிலுக்குள் அனுமதிக்கப்படவுள்ளனர். இதனையடுத்து கோயிலைச் சுற்றியும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அறிவிப்பினை மீறி வெளியூரிலிருந்து வருபவர்களை தடுத்த நிறுத்த காவலர்கள் ஆங்காங்கே பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

இந்த ஆருத்ரா தரிசனம் உள்ளூர் தொலைக் காட்சி சேனலிலும், இணையதளங்களிலும் நேரடி ஒளிபரப்பு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, மாவட்ட நிர்வாம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: வியாழன் சனி கோள்களின் பேரிணைவு: தொலைநோக்கியில் கண்டு ரசித்த பொதுமக்கள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.