தமிழ்நாட்டில் ஏப்ரல் 17ஆம் தேதி 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு வெளியானது. தேர்வு முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து மாணவ, மாணவியர் உயர்கல்வியில் சேர்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றனர். இந்நிலையில், கடலூர் தேவனாம்பட்டினத்தில் உள்ள அரசு பெரியார் கலைக் கல்லூரியில் மாணவர்களுக்கான சேர்க்கை விண்ணப்பம் விநியோகம் செய்யப்பட்டது.
இந்த நிலையில் மே 27ஆம் தேதி பெரியார் கலைக் கல்லூரியில் முதல் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதனையடுத்து இன்று பொருளியல், வரலாறு, அரசியல், அறிவியல், பொது நிர்வாகம் பாடங்களுக்கும், மதியம் தமிழ் இலக்கியம், ஆங்கில இலக்கியம் பாடங்களுக்கும் கலந்தாய்வு நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து தற்போது பொருளியல், வரலாறு, அரசியல், அறிவியல், பொது நிர்வாகம் பாடப்பிரிவுகளுக்கு கலந்தாய்வு தொடங்கப்பட்டு நடைபெற்றுவருகிறது.
இந்தக் கலந்தாய்வு கூட்டத்திற்கு கல்லூரி முதல்வர் ராஜ்குமார் தலைமை தாங்கினார். கலந்தாய்வு கூட்டத்திற்கு பங்கேற்க வந்த மாணவர்கள் தங்கள் பெற்றோருடன் கலந்துகொண்டனர். மேலும், இரண்டாம் கட்ட கலந்தாய்வுக் கூட்டம் ஜூன் மாதம் ஆறு, ஏழு ஆகிய தேதிகளில் நடைபெறும் என கல்லூரி முதல்வர் ராஜ் குமார் தெரிவித்துள்ளார்.