கடலூர் மாவட்டம் கார்மாங்குடி ஊராட்சியில் செல்லும் காட்டு ஓடை கடந்துதான் விவசாயிகள் வயல் வேலைக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. இந்த ஓடையின் ஆழம் அதிகமாக இருப்பதால் மழைக் காலங்களில் கடந்து செல்வது மிகவும் ஆபத்தாக இருக்கிறது என்றும் வாகனங்கள் ஏதும் செல்ல முடியாத நிலையும் உள்ளது
குறிப்பாக ஓடையின் மறுகரையில் விவசாயிகளின் விளை நிலங்கள் சுமார் 250 ஏக்கர் நிலம் உள்ளது. அங்கு நிலத்தை உழுவதற்கு டிராக்டர் கொண்டு போவதற்கும், விளைநிலங்களில் விளைந்த பொருட்களை வெளியில் எடுத்து வருவதும் மிகவும் சிரமமாக இருப்பதாக விவசாயிகள் கூறுகிறார்கள்
எனவே, அரசு அலுவலர்கள் நேரில் ஆய்வு செய்து விரைவில் ஓடையின் குறுக்கே பாலம் கட்டித் தர வேண்டும் என விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்தனர்.
இதையும் படிங்க: 'றெக்கை கட்டி பறக்கும் தமிழ்' - இனி தமிழ் மொழியிலும் விமான அறிவிப்புகள்