கடலூர் மாவட்டம் சிதம்பரம் உதவி ஆட்சியர் அலுவலகத்தில் இன்று ( மார்ச் 30 ) சிதம்பரம் பகுதியைச் சேர்ந்த மகளிர் ஆயம் உள்ள பெண் மற்றும் ஆண் நிர்வாகிகள் மனு அளிக்க வந்தனர். அதில் இந்திய அரசின் வழிகாட்டுதல் படி தமிழ்நாடு அரசு 2023 ஏப்ரல் முதல் அனைத்து நியாய விலை கடைகளிலும் விலையில்லா அரிசி உடன் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அதனை பொதுமக்களுக்கு வழங்க கூடாது என மனுவில் குறிப்பிடப்பட்டது.
இந்த மனுவை சிதம்பரம் உதவி ஆட்சியர் சுவேதா சுமன் நேர்முக உதவியாளரிடம் பெண்கள் பொதுமக்கள் மனு அளித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் கூறிய அவர்கள், “மத்திய அரசின் அறிவுறுத்தலின் பெயரில் தமிழ்நாடு அரசு ஏப்ரல் முதல் அனைத்து நியாய விலை கடைகளிலும் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்க முடிவு செய்துள்ளது. ஆனால், ஜனவரி மாதத்தில் இருந்து இந்த அரிசி வழங்கப்பட்டு வருகிறது என்றனர்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தில்லையரசி என்ற பெண், எங்கள் வீட்டில் எப்போதும் ரேசன் அரிசியை தான் சாப்பிடுகிறோம் என்றார். சாதாரண அரிசி நீரில் நன்றாக ஊறிவிடும் நிலையில், செறிவூட்டப்பட்ட அரிசி நீரில் ஊறுவதில்லை என்றார்.
அதாவது இரும்பு சத்து இல்லை என்பவர்கள் இரண்டு பேர் இருந்தால் 100 பேர் அந்த அரிசியை உட்கொள்ள நேரிடும், அதை அரிசி என்றே சொல்ல முடியாது மக்களுக்கு போடுகிற வாய்க்கரிசி என்று தான் கூற வேண்டும். இரும்பு சத்து என்பது உணவு மூலமாக தான் எடுத்துக் கொள்ள வேண்டும் பழங்கள் கீரை வகைகள் உட்கொண்டால் போதும் செரிமானம் பெறும் உடலுக்கு நல்லது. ஆனால், நியாய விலை கடை மூலம் வழங்கும் அரிசி செரிமானம் ஆகாது.
இதனால் வாந்தி, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட உபாதைகள் பொதுமக்களுக்கு நேரிடும் எதிர்காலத்தில் புற்றுநோய் வரக்கூட வாய்ப்புள்ளது. இந்த, அரிசியை கோழி, எறும்பு கூட உட்கொள்வதில்லை. இந்த அரிசியில் இருக்கும் வேதிப் பொருட்களை உணர்ந்து விலங்குகள், பறவைகள் இந்த அரிசியை விலக்கி வைக்கின்றன. ஆனால் மக்கள் வேறு வழியின்றி இந்த அரிசியை உண்ண வேண்டிய நிலை ஏற்படுவதாக கூறினார். மக்களுக்கு நல்லது செய்யவில்லை என்றாலும் பரவாயில்லை தீமைகளை செய்ய வேண்டாம். அதனால், இந்த செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கக் கூடாது என தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கின்றோம்” என தெரிவித்தனர்.
இதையும் படிங்க: ராகுல் பதவி நீக்கம்: "காங்கிரஸ் கட்சிக்கு மோடி நல்ல வாய்ப்பை உருவாக்கியுள்ளார்" - திருமாவளவன்