கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் வட்டத்தூர் ஊராட்சியில் டேங்க் ஆப்பரேட்டராக வேலை செய்துவருகிறார். இவர் சம்பள உயர்வு, நிலுவை தொகையை வழங்குமாறு ஊராட்சி செயலாளர் பழனிசாமியிடம் கேட்டுள்ளார்.
அதற்கு பழனிசாமி, மணிகண்டனிடம் 50 ஆயிரம் ரூபாய் லஞ்சமாக கேட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து ஊழல் தடுப்பு அலுவலகத்தில் மணிகண்டன் சகோதரர் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்பு துறை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து இன்று (செப்.25) பழனிசாமி முதல் தவணையாக லஞ்ச பணம் 20 ஆயிரம் ரூபாயை மணிகண்டனிடமிருந்து வாங்கியபோது லஞ்ச ஒழிப்பு துறை துணை கண்காணிப்பாளர் மெல்வின் ராஜசிங் தலைமையிலான காவல் துறையினர் கைது செய்தனர்.
இதையும் படிங்க: 100 நாள் வேலைக்கு லஞ்சம்? ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகை