ETV Bharat / state

இறந்தவரின் உடலை தெப்பக்கட்டை மூலம் ஆற்றைக் கடந்து கொண்டுவந்த உறவினர்கள்

கடலூர்: விருத்தாசலம் அடுத்த சொட்டவனம் கிராமத்தில் இறந்தவரின் உடலை தெப்பக்கட்டை மூலம் ஆற்றைக் கடந்து கொண்டுவரப்பட்டது.

sottavanam village
sottavanam village
author img

By

Published : Jan 9, 2021, 9:19 PM IST

விருத்தாசலம் அடுத்த சொட்டவனம் கிராமத்தினிடையே மணிமுக்தா ஆறு ஓடுகிறது. இந்த ஆற்றின் மறுகரையில் வசித்துவந்தவர் 80 வயதுடைய நாகரத்தினம். இவர் உடல் நலக்குறைவால் இன்று (ஜன. 09) அதிகாலை உயிரிழந்தார். அதையடுத்து இறந்தவரின் சடலத்திற்கு ஈமச் சடங்கு செய்வதற்காக அவரது மகன்கள், உறவினர்கள் அவரது சொந்த கிராமத்திற்கு கொண்டுவர முயற்சி செய்தனர்.

ஆனால், கடந்த சில நாள்களாக விருத்தாசலம், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை பெய்ததால் மணிமுக்தாறில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால், உயிரிழந்த முதியோருக்கு ஈமச் சடங்குகள் செய்வதற்காக அவரது மகன்கள் பொதுமக்களின் உதவியுடன், இருகரையும் தொட்டுக்கொண்டு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள மணிமுக்தாறில் தெப்பக்கட்டைகள் கொண்டு இணைக்கப்பட்ட கட்டிலில், இறந்தவரின் உடலைக் கிடத்தி ஆற்றைக் கடந்து கிராமத்துக்கு கொண்டுவந்தனர். பின்னர் இறந்தவருக்கு இறுதிச்சடங்கு பணிகளைச் செய்தனர்.

இதையும் படிங்க: இந்திய பாகிஸ்தான் எல்லையில் தமிழக ராணுவ வீரர் பலி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.