உலகை அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் தாக்கம் இந்தியாவில் படிப்படியாக அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதுவரை கரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு 205க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் முக்கியமான சுற்றுலாத் தலங்கள், தியேட்டர்கள் உள்ளிட்டவற்றை மார்ச் 31ஆம் தேதி வரை மூட அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் பள்ளிகள், கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளன. கரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு, பாதுகாப்பு நடவடிக்கைகளை அரசாங்கம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் கடலூர் திருப்பாதிரிப்புலியூரிலுள்ள பஜார் பள்ளிவாசலில் வெள்ளிக்கிழமை சிறப்புத் தொழுகை நடைபெற்றது. தொழுகைக்கு சுமார் 300க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் வந்திருந்தனர். தொழுகை நடந்து முடிந்த பின்னர் நகர் நல அலுவலர் அரவிந்த் ஜோதி, துப்புரவு ஆய்வாளர் பிரபாகரன், துப்புரவு மேற்பார்வையாளர் பக்கிரி ராஜா, தூய்மை இந்தியா இயக்க மேற்பார்வையாளர், ஊழியர்கள் உள்ளிட்டோர் கரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
இதையும் படிங்க: கரோனா அச்சுறுத்தல்: மருத்துவ மாணவர்களுக்கு விடுமுறை