இவ்விழாவை முன்னிட்டு, பள்ளி, கல்லூரிகளிடையே நடைபெற்ற பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, ஓவியப்போட்டி ஆகிய போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றிபெற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்களையும் பரிசுகளையும் அமைச்சர் வழங்கினார்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், ”கூட்டுறவு என்பது ஜனநாயக அடிப்படையில் மனித வாழ்க்கைக்குத் தொடர்புடையது. நெசவாளர்கள், விவசாயிகள், மகளிர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு நண்பகனாக கூட்டுறவுத் துறை விளங்குகிறது. கடலூரிலுள்ள கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் குறுகிய கால, மத்திய கால பயிர்க்கடன்கள் வழங்கப்பட்டுள்ளன.
கடலூர் மாவட்ட மக்களின் நலம் காக்க தரமான மருந்துகளை 20 சதவிகிதம் தள்ளுபடி விலையில் விற்பனை செய்திட கடலூர், பண்ருட்டி, சிதம்பரம், காட்டுமன்னார்கோயில், நெய்வேலி, விருத்தாச்சலம் உள்ளிட்ட பகுதிகளில் 10 மருந்தகங்கள் தொடங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகின்றன” என்றார்.
இதையும் படிங்க: ஆழ்துளைக் கிணறு வழக்கு: மனுதாரருக்கு ரூ. 25,000 அபராதம்!