ETV Bharat / state

பூணூல் இவ்வளவு காலமாகப் போட்டு இருந்தவர்கள் புனிதமானவர்களா? - அமைச்சர் பொன்முடி கேள்வி

Minister Ponmudi: பூணூல் போட்டால் புனிதர்களாக மாறிவிடுவார்களா? பூணூல் இவ்வளவு காலமாகப் போட்டு இருந்தவர்கள் புனிதமானவர்களா? புனிதத்துக்கும், பூணூலுக்கும் சம்பந்தமில்லை என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

minister-ponmudi-met-the-media-in-chidambaram
பூணூல் போட்டவர்கள் புனிதர்களாக மாறிவிடுவார்களா? - அமைச்சர் கேள்வி!
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 5, 2023, 3:48 PM IST

அமைச்சர் பொன்முடி

சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக 85-ஆவது பட்டமளிப்பு விழாவில் புதன்கிழமை கலந்து கொண்ட உயர் கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "நான் இந்த பல்கலைக்கழகத்தில் படித்தவன். நந்தனாரைப் பற்றி இங்குள்ள எல்லாருக்கும் தெரியும். நந்தனார் சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு வரும்போது அவரை அனுமதிக்காமல் கோயிலுக்கு வெளியே நின்றே கும்பிட்டார். அப்போது நந்தியே விலகி நின்று தரிசனம் செய்ததாகக் கூறப்படுகிறது. அன்றைக்கு நந்தனாரை என்ன செய்தார்கள் என்ற வரலாறு உண்டு. அந்த காலத்திலேயே சமூகநீதிக்காகவும், சமத்துக்காகவும், உரிமைக்காகவும் நந்தனார்தான் குரல் கொடுத்தார்.

நந்தனார் ஊருக்குச் சென்று அந்த சமுதாயத்தைச் சேர்ந்த மக்களுக்குப் பூணூல் போட்டு வருகிறார் என்றால் என்ன சொல்வது. இவர்கள் எதைத் திணிக்கிறார்கள் என்று தமிழ்நாட்டு மக்கள் சரியாகப் புரிந்து கொள்வார்கள். தமிழ்நாட்டில் சமூகநீதி இல்லை என ஆளுநர் கூறுகிறார். ஆனால், உண்மையான சமூகநீதி தமிழகத்தில் தான் இருக்கிறது.

இதையும் படிங்க: “எதிர்கட்சிகளின் ஒற்றுமையைக் கண்டு பாஜக பயப்படுகிறது” - ஐடி ரெய்டு குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம்!

இந்தியாவிலேயே, தமிழ்நாட்டில்தான் சமூக நீதி, சமத்துவம், அனைவரையும் சமமாகக் கருத வேண்டும் என்பது உள்ளது. பெரியார், அண்ணா, கருணாநிதி போன்ற தலைவர்கள் காலத்திலும் சமூக நீதியை நிறைவேற்றி இருக்கிறார்கள். இன்றைக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் அதை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார். ஆளுநர் பேசியது குறித்து அதிகமாகப் பேச விரும்பவில்லை.

பூணூல் போட்டால் புனிதர்களாக மாறிவிடுவார்களா? பூணூல் இவ்வளவு காலமாகப் போட்டு இருந்தவர்கள் புனிதமானவர்களா? புனிதத்துக்கும் பூணூலுக்கும் சம்பந்தமில்லை. எல்லோரும் சமம் என்பது தான் நம் தலைவர்கள் கூறி இருக்கிறார்கள். அதைப் பின்பற்றித்தான் திராவிட மாடல் ஆட்சி நடக்கிறது.

அனைவரும் சமமாக இருக்க வேண்டும். சாதி மத வேறுபாடு, ஆண் பெண் அடிமைத்தனம் இருக்கக் கூடாது. என்பதை எல்லாம் சொல்வதுதான் திராவிட மாடல் ஆட்சி. சமூக நீதிக்காக இயங்கும் இயக்கம் இது. இதுவரை தமிழ்நாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் கூறிக் கொண்டு இருந்தார் தற்போது இந்தியா முழுவதும் பரவ ஆரம்பித்து விட்டது. இது இந்தியா முழுவதும் எதிரொலிக்க ஆரம்பித்திருக்கிறது. இந்த சமத்துவ கொள்கையைத் திராவிட மாடல் ஆட்சியைத் திராவிட கொள்கைகளை, யார் நினைத்தாலும் ஒன்றும் செய்ய முடியாது" எனக் கூறினார்.

இதையும் படிங்க: டிபிஐ வளாகத்தில் போராட்டம் நடத்திய ஆசிரியர்கள் கைது; ஈபிஎஸ் உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.