ETV Bharat / state

நீர் விளையாட்டு வளாகத்தை திறந்து வைத்த அமைச்சர்! - கடலூர் அண்மைச் செய்திகள்

பரங்கிப்பேட்டையில் நீர் விளையாட்டு வளாகத்தை, அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் இன்று திறந்துவைத்தார்.

நீர் விளையாட்டு வளாகத்தை திறந்து வைத்த அமைச்சர்!

author img

By

Published : Sep 13, 2021, 9:06 AM IST

கடலூர்: சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டையில் சுற்றுலா துறையினை மேம்படுத்தும் வகையில் நீர் விளையாட்டு வளாகம் அமைக்கப்பட்டுள்ளது.

இதனை தமிழ்நாடு வேளாண்மை மற்றும் உழவர் நலன் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நேற்று (செப் 12) திறந்து வைத்து, படகு சவாரியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

அடிப்படை கட்டமைப்புக்காக ரூ.58.80 லட்சம்

நிகழ்ச்சிக்கு பின்னர் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பேசுகையில், “பரங்கிப்பேட்டை பேரூராட்சி நீர் விளையாட்டு வளாகம் அமைப்பின் அடிப்படை கட்டமைப்பிற்காக ரூ.58.80 லட்சத்தை வழங்கியுள்ளது.

மேலும் நீர் விளையாட்டு உபகரணங்களுக்கான கயாக்ஸ், கோனாஸ், துடுப்புப் படகு, உயிர்காக்கும் படகு ஆகியவற்றை அண்ணாமலைப் பல்கலைக்கழக கடல்வாழ் உயிரின உயராய்வு மையம் வழங்க பொறுப்பேற்றுள்ளது. படகு சவாரி இயக்கம் பகல் பொழுதில் மட்டும் பயிற்சி பெற்ற அலுவலரால் வழங்கப்படும்” என்றார்.

நிகழ்ச்சியின்போது மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்பிரமணியன், சிதம்பரம் உதவி ஆட்சியர் எல்.மதுபாலன், அண்ணாமலைப் பல்கலைக்கழக பதிவாளர் ஆர்.ஞானதேவன், கூடுதல் ஆட்சியர் பவன்குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சி.சக்திகணேசன், சிதம்பரம் துணை காவல் கண்காணிப்பாளர் சு.ரமேஷ்ராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இதையும் படிங்க: ஒன்றிய நிதியமைச்சர் நிகழ்ச்சியில் தள்ளுமுள்ளு - எம்.எல்.ஏவை அனுமதிக்க மறுத்ததால் பரபரப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.