கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி நிறுவனத்தில் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இதில் புதிய அனல் மின் நிலைய கட்டட பணிக்கு வந்த சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் பணிபுரிந்துவருகின்றனர்.
இந்நிலையில், கட்டட தொழிலில் ஈடுபட்ட தொழிலாளர்கள் ஊரடங்கு நீட்டிக்கப்படவுள்ளதால், தங்களை சொந்த ஊருக்கு அனுப்ப கோரி க்யூ பாலம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து இது குறித்து தகவலறிந்து வந்த நெய்வேலி டவுன்ஷிப் காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதனால் நெய்வேலியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க...ஊரடங்கு முடிந்த பிறகு தொழிற்சாலைகள் பின்பற்றவேண்டிய வழிமுறைகள்- தமிழக அரசு ஆணை