கடலூர்: காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள வீராணம் ஏரி ஏரியில் இருந்துதான் சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது. இதுமட்டுமல்லாமல் ஏரியை சுற்றி சுமார் 45 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
கடந்த சில மாதங்களுக்கு முன் பெய்த வடகிழக்கு பருவ மழையின் காரணமாக வீராணம் ஏரி முழு கொள்ளளவை எட்டியது. தொடர் வறட்சியின் காரணமாக வீராணம் ஏரியின் நீர்மட்டம் குறைந்து வருகிறது. இதனால் கீழணையில் இருந்து 400 கனஅடி தண்ணீர் வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு கடந்த இரு தினங்களாக கொண்டு செல்லப்பட்டது.
இந்நிலையில் வீராணம் ஏரிக்கு நேற்று (ஏப்ரல் 4) மாலையிலிருந்து தண்ணீர் வரத்து நிறுத்தப்பட்டுள்ளது. சென்னைக்கு 67 கன அடி நீர் அனுப்பப்பட்டு வருகிறது. மேலும் சென்னை குடிநீருக்காக வீராணம் ஏரியில் தண்ணீர் இருப்பை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், கால்வாய் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் குறைந்த அளவு மட்டுமே வீராணம் ஏரியில் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளதாகவும் பொதுப்பணித்துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: வண்டலூர் உயிரியல் பூங்காவில் செயற்கை மழை - கோடை வெப்பத்தைத் தணிக்க புதிய முயற்சி