ETV Bharat / state

வேட்பாளரின் சின்னம் இல்லாததால் தேர்தல் தற்காலிகமாக நிறுத்தம்!

கடலூர்: பண்ருட்டி ஒன்றியம் விலங்கல்பட்டு ஊராட்சியில்  4ஆவது வார்டுக்கான வேட்பாளர்களின் சின்னம் வாக்கு சீட்டில் இல்லாததால் உள்ளாட்சித் தேர்தல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

suspended due to lack of candidate logo
suspended due to lack of candidate logo
author img

By

Published : Dec 27, 2019, 11:36 AM IST

கடலூர் மாவட்டத்தில் காலியாகவுள்ள 3,165 உள்ளாட்சி பதவியிடங்களுக்கான தேர்தல் இன்று நடைபெற்றுவருகிறது. மாவட்டத்தில் மொத்தமுள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களில் 7 ஊராட்சி ஒன்றியங்களுக்கு முதல்கட்டமாக இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கியது.

பண்ருட்டி ஒன்றியம் விலங்கல்பட்டு ஊராட்சியில் நான்காவது வார்டில் 193 வாக்காளர்கள் உள்ளனர். இந்த வார்டிலும் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. இந்நிலையில் அந்தப் பகுதியில் போட்டியிடும் மோகனா மணிபாலன் என்கிற சுயேச்சை வேட்பாளரின் கார் சின்னம் வாக்குச் சீட்டில் இடம்பெறவில்லை என்பது தெரியவந்தது.

வேட்பாளர் சின்னம் இல்லாததால் உள்ளாட்சி தேர்தல் தற்காலிககாக நிறுத்தம்

40 பேர் அந்த வார்டில் வாக்களித்திருந்த நிலையில், தன்னுடைய சின்னம் இல்லாததற்கு மோகனா மணிபாலன் எதிர்ப்பு தெரிவித்ததால், தற்போது தற்காலிகமாக அங்கு வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்து தேர்தல் அலுவலர்கள் ஆலோசித்துவருகின்றனர்.

இதையும் படிங்க: 100 வயதிலும் ஜனநாயக கடமையை ஆற்றிய மூதாட்டி!

Intro:கடலூர் மாவட்டம் விலங்கல்பட்டு ஊராட்சி 4-ஆவது வார்டில் வேட்பாளர்களின் சின்னம் வாக்கு சீட்டில் இல்லாததால் தேர்தல் தற்காலிக நிறுத்தம்.Body:கடலூர்
டிசம்பர் 27,

கடலூர் மாவட்டத்தில் காலியாகவுள்ள 3,165 பதவியிடங்களுக்கானத் தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. கடலூர் மாவட்டத்தில் மொத்தமுள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களில் 7 ஊராட்சி ஒன்றியங்களுக்கு முதல்கட்டமாக இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்து முடிக்கப்பட்ட நிலையில் இத்தேர்தலில் மொத்தமுள்ள 14,44,975 வாக்காளர்களில் 8,43,812 பேர் வாக்களிக்கின்றனர். இவர்கள் வாக்களித்து 3,165 பேரைத் தேர்ந்தெடுக்கஉள்ளனர். இதற்காக, 1,596 வாக்குச்சாவடிகள் இந்த 7 ஊராட்சி ஒன்றியங்களிலும் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடலூர் மாவட்டம் பண்ருட்டி ஒன்றியம் விலங்கல்பட்டு ஊராட்சியில் 4வது வார்டில் 193 வாக்காளர்கள் உள்ளன. இந்த வாட்டில்காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது இந்நிலையில் அந்த பகுதியில் போட்டியிடும் மோகனாமணிபாலன் என்கிற சுயேச்சை வேட்பாளரின் கார் சின்னம் வாக்குச் சீட்டில் இல்லை என்பது தெரியவந்தது. 40 பேர் அந்த வார்டில் வாக்களித்த நிலையில் அந்த வேட்பாளர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் தற்போது தற்காலிகமாக வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது இது குறித்து அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.