கடலூர் மாவட்டம், திட்டக்குடி அருகே மா.புடையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில் குமார் (34). இவரது சித்தப்பா மகன் தனசேகரன் (39). சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். தனசேகரனின் தந்தை இறந்ததால், அவரது நிலத்தை விற்க வாரிசு சான்றிதழ் வாங்கித் தரும்படி செந்தில் குமாரிடம் கேட்டுள்ளார்.
இதில், தனசேகரனுக்கும் சகோதரி புஷ்பவள்ளிக்கும் தகராறு ஏற்பட்டதால் நிலத்தை விற்க முடியாத நிலை ஏற்பட்டது. இந்த விவகராத்தில் செந்தில்குமார் தனக்கு துரோகம் இழைத்துவிட்டதாக தனசேகரன் நினைத்துள்ளார். இதில் கோபமடைந்த தனசேகரன் செந்தில்குமாரை பெட்ரோல் ஊற்றி கொலை செய்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் தனசேகரனை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். தற்போது இவ்வழக்கின் விசாரணை சிதம்பரம் கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இன்று நீதிபதி இளவரசன் தீர்ப்பு வழங்கினார். அப்போது தனசேகரனுக்கு ஆயுள் தண்டனையும், 2 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
இதையும் படிங்க: கொடநாடு கொலை வழக்கு : 10 பேரும் நேரில் ஆஜராக சம்மன்