ETV Bharat / state

மாவட்ட ஆட்சியரிடம் கரோனா தடுப்பு நிதி வழங்கிய சட்டமன்ற உறுப்பினர்கள்

கடலூர்: கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை நிதியினை சட்டமன்ற உறுப்பினர்கள் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர்.

author img

By

Published : Mar 27, 2020, 12:27 AM IST

மாவட்ட ஆட்சியரிடம் கரோனா தடுப்பு நிதி வழங்கிய சட்டமன்ற உறுப்பினர்கள்
மாவட்ட ஆட்சியரிடம் கரோனா தடுப்பு நிதி வழங்கிய சட்டமன்ற உறுப்பினர்கள்

கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் கரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்காக கடலூர் சட்டமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.55 லட்சத்திற்கான நிதி ஒதுக்கீட்டினை தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் மாவட்ட ஆட்சித்தலைவர் வெ.அன்புச்செல்வனிடம் வழங்கினார்.

கடலூர் மாவட்டத்தில் கரோனா தொற்றுநோய் நடவடிக்கைகளுக்காக (Liquid Oxygeon) ஆக்ஸிஜனுக்கு 50 லட்சம் ரூபாய், இதர உபகரணங்களுக்கு 5 லட்ச ரூபாயும், ஆக மொத்தம் 55 லட்சம் ரூபாய்க்கான நிதி ஒதுக்கீட்டினை தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் மாவட்ட ஆட்சித்தலைவர் வெ.அன்புச்செல்வனிடம் வழங்கினார்.

மேலும் கரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்காக பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து ஒத்துழைப்பு அளித்திடுமாறு தெரிவித்தார். கடலூர் மாவட்டத்தில் கரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்காக சிதம்பரம் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 32 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டினை சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.பாண்டியன் மாவட்ட ஆட்சித்தலைவர் வெ.அன்புச்செல்வனிடம் வழங்கினார்.

கடலூர் மாவட்டத்தில் கரோனா தொற்றுநோய் நடவடிக்கை பணிகளுக்காக தொற்று நோய் கண்டறியும் ALTA Gentier 96 Real Time PCR-IVD certified மேலும் 13 அத்தியாவசிய இணை உபகரணங்கள் கொள்முதல் செய்ய 32 லட்சம் ரூபாய் நிதியை வழங்கினார்.

மேலும் கரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்காக பொதுமக்களுக்கு சேவை செய்ய ஆயத்தமாகவுள்ளதாகவும் தெரிவித்தார்.

கடலூர் மாவட்டம் புவனகிரி திமுக சட்டமன்ற உறுப்பினர் துரை.கி. சரவணன் தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கரோனா வைரஸ் தடுப்பு மருத்துவ தளவாட பொருட்கள் வாங்க 20 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி தனது ஒரு மாத ஊதியமாக ஒரு லட்சத்தி ஐயாயிரத்தை முதல்வர் நிவாரண நிதிக்கு காசோலையாக வழங்கினார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.