ETV Bharat / state

கடலூரில் பலத்த பாதுகாப்புடன் நிறைவடைந்தது வேட்புமனுத் தாக்கல்

கடலூர்: உள்ளாட்சித் தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்வதற்கு கடைசி நாளான நேற்று, திமுக அதிமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் தங்கள் ஆதரவாளர்களுடன் மேளதாளங்கள் முழங்க வருகை தந்தனர். இதனால் கடலூர் யூனியன் அலுவலகம் பரபரப்பாக காணப்பட்டது.

கடலூரில் பலத்த பாதுகாப்புடன் நிறைவடைந்தது வேட்புமனுத் தாக்கல்
கடலூரில் பலத்த பாதுகாப்புடன் நிறைவடைந்தது வேட்புமனுத் தாக்கல்
author img

By

Published : Dec 17, 2019, 8:49 AM IST

Updated : Dec 17, 2019, 8:54 AM IST

தமிழ்நாட்டில் உள்ள 27 மாவட்டங்களுக்கும் உள்ளாட்சி மன்ற தேர்தல் வருகிற 27, 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் டிசம்பர் 9ஆம் தேதி தொடங்கி நேற்று மாலையுடன் நிறைவடைந்தது. இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் உள்ள 14 பஞ்சாயத்து யூனியன் அலுவலத்தில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வேட்புமனுத் தாக்கல்செய்துள்ளனர். கடைசி நாளான நேற்று அதிமுக, திமுக கூட்டணி கட்சிகள் காலை முதல் வேட்புமனுத் தாக்கல் செய்தனர்.

கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து யூனியன் அலுவலகங்களில் மாவட்ட கவுன்சிலர், யூனியன் கவுன்சிலர், பஞ்சாயத்து தலைவர் மற்றும் ஊராட்சி பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிக்கு வேட்புமனுத் தாக்கல் செய்பவர்கள் தங்கள் ஆதரவாளர்களுடன் கார், பஸ்,வேன், மோட்டார் சைக்கிளில் மேளதாளங்களுடன் வந்தனர். யூனியன் அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள், வேட்புமனுத் தாக்கல் செய்த நபருடன் மூன்று நபர்கள் மட்டுமே செல்ல அனுமதித்தனர்.

கடலூரில் பலத்த பாதுகாப்புடன் நிறைவடைந்தது வேட்புமனுத் தாக்கல்

மேலும் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ் உத்தரவின்பேரில் காவலர்கள் அந்தந்த யூனியன் அலுவலகங்களில் குவிக்கப்பட்டிருந்தனர். வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கு அதிமுக திமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள், ஆதரவாளர்கள் திரண்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

இதையும் படிங்க: தேனியில் ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு நேருக்கு நேர் மோதும் அதிமுக, திமுக!

Intro:உள்ளாட்சி தேர்தல் வேட்புமனு தாக்கல் இன்று கடைசி நாள் அதிமுக திமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் வேட்புமனுத் தாக்கல்
Body:கடலூர்
டிசம்பர் 16,

உள்ளாட்சித் தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்வதற்கு இன்று கடைசி நாள் திமுக அதிமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் தங்கள் ஆதரவாளர்களுடன் மேளதாளங்கள் முழங்க வேட்புமனு தாக்கல் செய்தனர் இதனால் கடலூர் யூனியன் அலுவலகத்தில் பரபரப்பாக காணப்பட்டது.

தமிழ்நாட்டில் உள்ள 27 மாவட்டங்களுக்கும் உள்ளாட்சி மன்ற தேர்தல் வருகிற 29 மற்றும் 30 தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெறம் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் டிசம்பர் 9ஆம் தேதி தொடங்கி இன்று மாலையுடன் வேட்புமனுத்தாக்கல் நிறைவடைந்தது.
இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் உள்ள 14 பஞ்சாயத்து யூனியன் அலுவலத்தில் 12 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் வேட்பு மனு தாக்கல்செய்துள்ளனர். கடைசி நாளான இன்று அதிமுக மற்றும் திமுக கூட்டணி கட்சிகள் காலை முதல் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து யூனியன் அலுவலகங்களில் மாவட்ட கவுன்சிலர், யூனியன் கவுன்சிலர், பஞ்சாயத்து தலைவர் மற்றும் ஊராட்சி பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்பவர்கள் தங்கள் ஆதரவாளர்களுடன் கார், பஸ்,வேன், மோட்டார் சைக்கிளில் மேளதாளங்களுடன் வந்தனர். யூனியன் அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்த நபருடன் மூன்று நபர்கள் மட்டுமே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

மேலும் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ் உத்தரவின்பேரில் போலீசார் அந்தந்த யூனியன் அலுவலகங்களில் குவிக்கப்பட்டிருந்தனர். மேலும் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு அதிமுக திமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் ஆதரவாளர்கள் திரண்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.Conclusion:
Last Updated : Dec 17, 2019, 8:54 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.