ETV Bharat / state

நிலத்தை மீட்டுத்தரக்கோரி பெண் தீக்குளிக்க முயற்சி

கடலூர்: தனி நபரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலத்தை மீட்டுத்தரக்கோரி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.

தற்கொலை முயற்சி
author img

By

Published : Jul 22, 2019, 10:24 PM IST

கடலூர் மாவட்டம், செம்மங்குப்பத்தை சேர்ந்தவர் வீரசேகர். இவரது மனைவி ராஜேஸ்வரி (45). இந்நிலையில் ராஜேஸ்வரி, இன்று கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைப்பெற்ற மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில் மனு அளிக்கச் சென்றுள்ளார். அப்போது அவர் மறைத்துவைத்திருந்த மண்ணெண்ணெய்யை எடுத்து தலையில் ஊற்றிக் கொண்டார். பின்பு அங்குப் பாதுகாப்புக்கு இருந்த காவலர்கள் அவரை தடுத்து நிறுத்தினர்.

தீக்குளிக்க முயற்சி செய்த பெண்

இதனையடுத்து, காவல்துறையினர் நடத்திய விசாரணையில் ராஜேஸ்வரி கூறியதாவது, “எனது கணவர் வீர சேகர் பெயரில், 36 சென்ட் நிலம் உள்ளது. இந்த நிலத்தைத் தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்துக் கொண்டார். இந்த இடத்தை அளவாய்வாளர் மூலம் அளந்து கொடுக்கும்படி பலமுறை மனு கொடுத்தும் அலுவலர்கள், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே எங்களது நிலத்தை மீட்டுத்தரக் கோரி மனு கொடுக்க வந்தேன்” என்று கூறினார்.

இந்தச் சம்பவத்தால் ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பதற்றம் நிலவியது.

Intro:நிலத்தை மீட்டு தரக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உடலில் மண்ணெண்ணெயை ஊற்றிக் கொண்டு தற்கொலைக்கு முயன்ற பெண்Body:கடலூர்
ஜூலை 22,

தனி நபரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலத்தை மீட்டுத்தரக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தற்கொலைக்கு முயன்ற பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தை சேர்ந்தவர் வீரசேகர் இவரது மனைவி ராஜேஸ்வரி (45) இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்றது அப்போது மனு கொடுக்க வந்த ராஜேஸ்வரி மறைத்துவைத்திருந்த மண்ணெண்ணெய்யை எடுத்து தலையில் ஊற்றிக் கொண்டார். பின்பு அங்கு பாதுகாப்புக்கு இருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் ராஜேஸ்வரி கூறியதாவது, எனது கணவர் வீர சேகர் பெயரில் 36 சென்ட் நிலம் உள்ளது இந்த நிலத்தை தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்துக் கொண்டார் இந்த இடத்தை சர்வேயர் மூலம் அளந்து கொடுக்கும்படி பலமுறை மனு கொடுத்தும் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவே எங்களது நிலத்தை மீட்டுத்தரக் கோரி மனு கொடுக்க வந்தேன் என்று கூறினார்.

மனு கொடுக்க வந்த பெண் தலையில் மண்ணை ஊற்றிக்கொண்ட சம்பவத்தால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.