கடலூர் நாடாளுமன்றத்தொகுதியில் 21 பேர் போட்டியிடுகின்றனர். இந்நிலையில், ஒரு மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் 16 வேட்பாளர்கள் பெயர் மற்றும் சின்னங்கள் மட்டுமே இடம் பெற்றிருக்கும். 21 வேட்பாளர்கள் மற்றும் நோட்டா சின்னம் இருப்பதால் கூடுதலாக மேலும் ஒரு வாக்குப்பதிவு இயந்திரம் ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் தேவைப்படுகிறது.
எனவே கடலூர் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட திட்டக்குடி சட்டமன்றத் தொகுதிக்கு 317 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும், விருத்தாசலத்திற்கு 361, நெய்வேலிக்கு 296, பண்ருட்டி 331, கடலூருக்கு 291, குறிஞ்சிப்பாட்டு 327 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது. மொத்தம் உள்ள 2301 வாக்குசாவடிகளுக்குத் தேவையான 2951 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும், 3002 வி.வி.பேட் கருவிகளும் அனுப்பி வைக்கப்பட்டன.
மேலும்துணைத் தேர்தல் அலுவலர் வைத்தியநாதன் மற்றும் அதிகாரிகள், கட்சி பிரதிநிதிகள் ஆகியோர் முன்னிலையில் கடலூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு தேவையான வாக்குப்பதிவு இயந்திரங்கள் பிரிக்கப்பட்டுஅந்தந்த பகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவற்றை ஊழியர்கள் அந்த தொகுதியில் இருந்து வந்த வாகனங்களில் ஏற்றி அனுப்பி வைத்தனர்
.