ETV Bharat / state

இளங்கீரனை தாக்கிய காவல் துறையினருக்கு கேஎஸ் அழகிரி கண்டனம்

கடலூர்: காவிரி பாசன விவசாய சங்க கூட்டமைப்பு தலைவர் இளங்கீரனை காவல் துறையினர் தாக்கியதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ் அழகிரி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இளங்கீரனை தாக்கிய காவல் துறையினருக்கு கேஎஸ் அழகிரி கண்டனம்
இளங்கீரனை தாக்கிய காவல் துறையினருக்கு கேஎஸ் அழகிரி கண்டனம்
author img

By

Published : Feb 12, 2021, 2:54 PM IST

கடலூர் மாவட்டம் திருச்சி-சிதம்பரம் இடையே தேசிய நெடுஞ்சாலை அமைப்பதற்கு பல்வேறு கிராம பகுதிகளில் இடங்கள் தேர்வு செய்யப்பட்டன. இன்று (பிப்.12) வீரானந்தபுரம் கிராமத்தில் வீடுகளை இடிப்பதற்கு வந்த அலுவலர்களை பொதுமக்கள் தடுத்து நிறுத்தினர்.

அப்போது அலுவலர்களிடம் உரிய இழப்பீடு வழங்க வேண்டும், கால அவகாசம் வழங்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்தனர். ஆனால் அலுவலர்கள் கால அவகாசம் வழங்க முடியாது என தெரிவித்து பொக்லைன் இயந்திரம் கொண்டு வீடுகளை இடிக்கும் பணியை தொடங்கினர்.

இளங்கீரனை தாக்கிய காவல் துறையினருக்கு கேஎஸ் அழகிரி கண்டனம்

இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் வீடுகள் இடிக்கும் பணியை தடுத்து நிறுத்தினர். அப்போது காவிரி பாசன விவசாய சங்க கூட்டமைப்பு தலைவர் இளங்கீரனை காவல் துறையினர் தாக்கி கைது செய்ததாக தெரிகிறது.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட இளங்கீரனுக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டது. உடனே காட்டுமன்னார்கோயில் அரசு மருத்துவமனையில் அவரை சிகிச்சைக்கு காவல் துறையினர் அனுமதித்தனர்.

இச்சம்பவத்தை கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ் அழகிரி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "காவிரி டெல்டா பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் இளங்கீரன் கால் நூற்றாண்டுகளுக்கு மேலாக விவசாயிகளுக்காக போராடி வருபவர். அவரை காட்டுமன்னார்கோவில் காவல் துறையினர் கடுமையாக தாக்கியுள்ளனர். இது ஜனநாயகத்தில் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும். இந்த தவறான செயலை உடனடியாக கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், "காவேரி பாசன விவசாய சங்கத் தலைவரும் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு மாநில செயற்குழு உறுப்பினருமான இளங்கீரன் மீது காவல் துறையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். பொதுநோக்கிற்காக சென்றவரை காவல் துறையினர் கை நீட்டி அடிப்பது என்பது ஜனநாயகத்தில் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும். இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அவர் மீது போடப்பட்ட வழக்கை திரும்பப் பெற வேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: விவசாய பயன்பாட்டு பம்பு செட்டுக்கு 24 மணி நேர மும்முனை மின்சாரம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.