ETV Bharat / state

'தோல்வி பயத்தால் முதலமைச்சர் சாபம் விடுகிறார்' - கனிமொழி

author img

By

Published : Mar 25, 2021, 5:54 AM IST

கடலூர்: "முதலமைச்சர் பழனிசாமி தோல்வி பயத்தால் அனைத்துக் கட்சியினருக்கும் சாபம் விடுகிறார்" என திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார்.

கடலூரில் கனிமொழி பரப்புரை
கடலூரில் கனிமொழி பரப்புரை

கடலூர் சட்டப்பேரவை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் ஐயப்பனை ஆதரித்து திருப்பாதிரிப்புலியூர் அருகே திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், "முதலமைச்சர் பழனிசாமிக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. பயத்தில் அவர் அனைத்துக் கட்சியினரையும் சபித்துவருகிறார். தெருவில் இறங்கி சாபம் விடும் அளவுக்கு அவர் வந்துவிட்டார்.

தமிழ்நாடு முதலமைச்சர், அனைத்து அமைச்சர்களின் மீதும் ஊழல் வழக்குகள் உள்ளன. இதில் இருந்து தப்பிக்கவும் ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ளவும் அவர்கள் தமிழ்நாட்டை டெல்லியில் அடமானம் வைத்துவிட்டனர். வேளாண் சட்டங்களுக்கும், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கும் ஆதரித்து தெரிவித்து வந்த முதலமைச்சர் தற்பொழுது ஆட்சிக்கு வந்தால் அனைத்தையும் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என போலியான வாக்குறுதிகளை தருகிறார்.

கடலூரில் கனிமொழி பரப்புரை

கோடிக்கணக்கில் செலவு செய்து இரண்டு முதலீட்டாளர் மாநாட்டை நடத்தினார்கள். ஆனால் இதுவரை யாருக்கும் வேலை வாய்ப்பு என்பது வழங்கப்படவில்லை. அமைச்சர் சம்பத் உடனடியாக இதற்கு பதிலளிக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.