ETV Bharat / state

தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களை அறியும் செயலி...! - paralimentary election

கடலுார்: தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களை அறியும் செயலியை கடலூர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ப.சரவணன் அறிமுகப்படுத்தினார். தேர்தல் பணியில் ஈடுபடும் காவல் துறையினர், வருவாய்த் துறையினர் மட்டுமே இந்த செயலியை பதிவிறக்கம் செய்ய முடியும் என அவர் தெரிவித்தார்.

District Election App
author img

By

Published : Mar 26, 2019, 11:47 PM IST

Updated : Mar 26, 2019, 11:59 PM IST

ஒரு மாவட்டத்தில் தேர்தல் நடக்கும்போது ஏதாவது ஒரு வாக்குச்சாவடியில் பிரச்னை எதுவும் ஏற்பட்டால், அந்த வாக்குச் சாவடியின் பொறுப்பாளர் என்பதை தெரிந்துகொள்ள சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்கங்களைக் கொண்ட புத்தகத்தைப் புரட்டி பார்க்க வேண்டும். இந்தப் புத்தகத்தை எல்லோரும் கையில் எடுத்துச் செல்ல முடியாது.

கடலுார் மாவட்டத்தில் ஒன்பது சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. கடலுார், சிதம்பரம் (தனி) நாடாளுமன்றத் தொகுதியை உள்ளடக்கிய இம்மாவட்டத்தில் 1,183 இடங்களில் 2,301 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தத் தேர்தல் பணியில் 15 ஆயிரம் பேர் வரையில் ஈடுபடும் நிலையில், அவர்களைத் தொடர்பு கொள்வது என்பது காவல் துறைக்கும், வருவாய்த் துறைக்கும் சவாலான விஷயமாகும்.

இதனை மாற்றியமைக்கும் முயற்சியில் கடலுார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப.சரவணன் ஈடுபட்டார். இதற்காக, வாக்குச்சாவடி அமைந்துள்ள இடங்களில் நேரடியாக ஆட்களை நியமித்து, அதன் அட்ச, தீர்க்க ரேகையுடன் இடங்களைப் பதிவுசெய்ய வைத்தார். பின்னர், எக்ஸ்கான் இன்போ டெக் என்ற நிறுவனத்துடன் இணைந்து நாடாளுமன்றத் தொகுதி, அதில் அடங்கியுள்ள சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக வாக்குச்சாவடி மையங்கள் பகுக்கப்பட்டன.

இதனையடுத்து, வாக்குச்சாவடி, காவல் நிலையத்தின் கட்டுப்பாட்டின் கீழ்வரும் பூத் வாரியாகவும் பிரிக்கப்பட்டு, அதன் பொறுப்பு அலுவலர்களின் செல்லிடப்பேசி எண்கள் அனைத்தும் அதில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த செல்லிடப்பேசி செயலியை இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப.சரவணன் இன்று அறிமுகப்படுத்தினார்.

கடலுார் மாவட்ட காவல்துறை

அப்போது அவர் கூறுகையில், கடந்த காலத் தேர்தல் அனுபவங்களின் அடிப்படையில் 'Cuddalore District Election App' என்ற செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக இரண்டாயிரத்து 301 வாக்குச்சாவடி மையங்களின் பொறுப்பாளர்களையும், காவல் துறையின் 195 நடமாடும் பாதுகாப்பு வாகனங்களின் பொறுப்பாளர்களின் செல்லிடப்பேசி எண்களையும் எளிதில் அறிந்து கொள்ள முடியும்.

மேலும், நாம் எங்கிருக்கிறோமோ அந்த இடத்திலிருந்து பிரச்னைக்குரிய இடத்திற்கு உடனடியாக செல்வதற்கான வழிகாட்டும் வரைபடமும் அதில் இணைக்கப்பட்டுள்ளது. இது தேர்தல் பணியை மேலும் எளிமையாக்கும். தேர்தல் பணியில் ஈடுபடும் காவல் துறையினர், வருவாய்த் துறையினர் மட்டுமே இந்த செயலியை பதிவிறக்கம் செய்ய முடியும் என்றார்.

தேர்தல் பணியில் ஈடுபடும் அதிகாரிகளை அறியும் செயலி
காவல்துறை ஏற்பாடு

கடலூர்
மார்ச் 26,
தேர்தல் பணியில் ஈடுபடுவோரை அறியும் செயலியை கடலூர் மாவட்ட காவல்துறை ஏற்பாடு செய்துள்ளது.

கடலூர் மாவட்டத்தில் 9 சட்டமன்ற தொகுதிகள் அடங்கியுள்ளது. கடலூர், சிதம்பரம் (தனி) மக்களவைத் தொகுதியை உள்ளடக்கிய இம்மாவட்டத்தில் 1,183 இடங்களில் 2,301 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இத்தேர்தல் பணியில் சுமார் 15 ஆயிரம் பேர் வரையில் ஈடுபடும் நிலையில் அவர்களைத் தொடர்புக் கொள்வது என்பது காவல்துறைக்கும், வருவாய்த்துறைக்கும் சவாலான விஷயமாகும். குறிப்பாக, மாவட்டத்திலிருந்து வெகு தொலைவில் அமைந்துள்ள ஏதாவது ஒரு வாக்குச்சாவடியில் பிரச்னை ஏற்பட்டால் அந்த வாக்குச்சாவடியின் பொறுப்பாளர் யார் என்பதை தெரிந்துக் கொள்ள வேண்டுமெனில் அதற்காக ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்கங்களைக் கொண்ட புத்தகத்தை புரட்டி அதிலிருந்து பொறுப்பாளர் பெயரை தேடிப்பிடிக்க வேண்டியிருக்கும். இப்புத்தகத்தை எல்லோரும் கையில் எடுத்துச் செல்ல முடியாது. எனவே, இதனை மாற்றியமைக்கும் முயற்சியில் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப.சரவணன் ஈடுபட்டார். இதற்காக, வாக்குச்சாவடி அமைய உள்ள 1,183 இடங்களுக்கும் நேரடியாக ஆட்களை நியமித்து அதன் அட்ச, தீர்க்க ரேகையுடன் இடங்களை பதிவு செய்ய வைத்தார். பின்னர், எக்ஸ்கான் இன்போ டெக் என்ற நிறுவனத்துடன் இணைந்து மக்களவைத் தொகுதி அதில் அடங்கியுள்ள சட்டமன்ற தொகுதி வாரியாக வாக்குச்சாவடி மையங்கள் பகுக்கப்பட்டன. பின்னர், பூத் மற்றும் காவல்நிலையத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வரும் பூத் வாரியாகவும் பிரிக்கப்பட்டு அதன் பொறுப்பு  அலுவலர்களின் செல்லிடப்பேசி எண்கள் அனைத்தும் அதில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்த செல்லிடப்பேசி செயலியை செவ்வாய்க்கிழமையன்று அறிமுகப்படுத்தினார் காவல் கண்காணிப்பாளர் ப.சரவணன். அப்போது அவர் கூறுகையில், கடந்த கால தேர்தல் அனுபவங்களின் அடிப்படையில் Cuddalore District Election App என்ற செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக 2301 வாக்குச்சாவடி மையங்களின் பொறுப்பாளர்களையும், காவல்துறையின் 195 நடமாடும் பாதுகாப்பு வாகனங்களின் பொறுப்பாளர்களது செல்லிடப்பேசி எண்களையும் எளிதில் அறிந்துக் கொள்ள முடியும். மேலும், நாம் எங்கிருக்கிறோமோ அந்த இடத்திலிருந்து பிரச்னைக்குரிய இடத்திற்கு உடனடியாக செல்வதற்கான வழிகாட்டும் வரைபடமும் அதில் இணைக்கப்பட்டுள்ளது. இது தேர்தல் பணியை மேலும் எளிமையாக்கும். தேர்தல் பணியில் ஈடுபடும் காவல்துறையினர், வருவாய்துறையினர் மட்டுமே இந்த செயலியை பதிவிறக்கம் செய்ய முடியும் என்றார்.

Video send ftp
File name: TN_CDL_03_SP_OFFICE_APP_7204906
Last Updated : Mar 26, 2019, 11:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.