கடலூர், கிழக்கு ராமாபுரம் நடு குப்பத்தைச் சேர்ந்த ஞானசேகரன். இவர் அக்ரிமென்ட் கிரையம் செய்வதற்காக கடலூர் இணைப்பதிவாளர் பூசை துரை என்பவரை அணுகியுள்ளார். அக்ரிமென்ட் கிரையம் செய்வதற்கு 5,000 கையூட்டு தரவேண்டும் என்று கேட்டுள்ளார்.
கைது
பத்திர நகல் எடுப்பதற்காக வெளியில் சென்று பத்திர நகலுடன் திரும்பிவந்து ஐந்தாயிரம் கொடுத்தபோது, அந்தப் பணத்தை உதவியாளர் எம்.கே. செல்வம் என்பவரிடம் கொடுத்துள்ளார். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புக் காவல் துறையினர் கையும் களவுமாகப் பிடித்துக் கைதுசெய்தனர்.
மாவட்ட லஞ்ச ஒழிப்புக் காவல் துணைக் கண்காணிப்பாளர் ராஜா மெல்வின் சிங் தலைமையிலான பத்துக்கும் மேற்பட்ட காவலர்கள் இந்தச் சோதனையில் ஈடுபட்டனர்.
இதில் கையூட்டுப் பணம், பத்திர ஆவணங்கள் ஆகியவை பறிமுதல்செய்யப்பட்டதாகக் காவல் துறையினர் தெரிவித்தனர்.