கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தமிழ்நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் யாரும் வெளியே வரவேண்டாம் என அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் வெளிமாநில வாகனங்கள் தமிழ்நாட்டிற்கு உள்ளே வரும்போது அந்த வாகனங்களின் மீது கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, பின்னர் அனுமதிக்கப்பட்டுவருகின்றனர்.
இதனையடுத்து தமிழ்நாடு எல்லை பகுதியான கடலூர் பெரிய கங்கணங்குப்பம் பகுதியில் காவல் துறையினர் சோதனைச் சாவடி அமைத்துள்ளனர். இந்த சோதனைச்சாவடி வழியாக பெரும்பாலான வெளிமாநில வாகனங்கள் கடலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளுக்கு வந்து செல்கின்றனர்.
இதனால் அந்தச் சோதனை சாவடியில் வழியாக செல்லக்கூடிய வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிக்கப்பட்ட பின்னரே அனுமதிக்கப்பட்டுவருகிறது.
இதனையடுத்து இந்த சோதனைச் சாவடியில் இன்று வடக்கு மண்டல ஐஜி நாகராஜன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஒரு மோட்டார் சைக்கிளில் இருவர் சென்றுகொண்டிருந்தனர். அவர்களை நிறுத்தி சோதனை செய்த காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.
அப்போது அவர்கள் காவல் துறையினர் என்று கூறினர். இதனைப் பார்த்த வடக்கு மண்டல ஐஜி நாகராஜன், தற்போது நீங்கள் பணியில் உள்ளீர்களா என கேட்டபோது அவர்கள் ஓய்வில் உள்ளோம் எனக் கூறியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள போது எவ்வித காரணமும் இன்றி எப்படி வெளியில் வந்தீர்கள் என கேட்டு அந்த இரு காவலர்கள் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கும்படி உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இதையும் படிங்க...சொமேட்டோ பையில் வைத்து கஞ்சா விற்ற நபர் கைது!