ETV Bharat / state

மனைவியை கழுத்தை நெறித்து கொலை செய்த கணவர்

கடலூர்: முத்தாண்டிக்குப்பம் அருகே நடுக்குப்பம் கிரமத்தில் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு கணவர் அவரை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் கிரைம் செய்திகள்
கடலூர் கிரைம் செய்திகள்
author img

By

Published : Apr 9, 2021, 6:43 PM IST

கடலூர் மாவட்டம் நடுக்குப்பத்தில் வசிப்பவர் அருணாசலம் (31). கூலி வேலை செய்து வரும் இவருக்கும், லட்சுமி (29) என்பவருக்கும் கடந்த ஆண்டு நடந்தது. இந்நிலையில், திருமணம் முடிந்து எட்டு மாதத்திலேயே லட்சுமிக்குக் குழந்தை பிறந்ததால், அவர் மீது சந்தேகம் ஏற்பட்டு அருணாச்சலம் அடிக்கடி பிரச்சினை செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் லட்சுமி அடிக்கடி சில ஆண்களுடன் தொலைப்பேசி வாயிலாகப் பேசி வந்ததால் இருவருக்கும், சண்டை ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து மனைவி தன் பேச்சைக் கேட்காததால், அருணாச்சலம் ஆத்திரமடைந்து லட்சுமி கழுத்தை நெறித்து கொலை செய்துவிட்டு முத்தாண்டிக்குப்பம் காவல்நிலையத்தில் சரணடைந்தார்.

உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவலர்கள், லட்சுமியின் உடலைக் கைப்பற்றி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலை செய்த அருணாசலத்தைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: கோயில் தர்மகர்த்தாவின் சடலம் ரத்தக்கறையுடன் மீட்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.