ETV Bharat / state

நீதிமன்ற தடையை மீறி முதலமைச்சர் வருகைக்காக ஆற்றில் மணல் அள்ளும் மாவட்ட நிர்வாகம்!

author img

By

Published : Nov 23, 2019, 5:17 PM IST

கடலூர்: நீதிமன்ற தடையை மீறி மணல் அள்ளியது எப்படி என வெள்ளை அறிக்கை வெளியிட சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மஞ்சகுப்பம் பகுதியில் நடைபெறும் பணிகள்

கடந்த 2018இல் மஞ்சக்குப்பம் மைதானத்தில் ரூ.2.25 கோடி மதிப்பில் எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சியாருக்கு மணிமண்டபம் கட்டப்பட்டு, கடந்த ஒன்றரை ஆண்டுகளாக திறப்பு விழா காணப்படாமல் உள்ளது. இந்நிலையில் தற்போது 25ஆம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இந்த மணிமண்டபம் திறக்கபடவுள்ளது.

இதற்கான விழா ஏற்பாடுகள் கடலூர் மஞ்சநகர மைதானத்தில் பல்வேறு விதிமுறை மீறல்களுடன் நடைபெற்று வருகிறது. முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்கக் கூடிய இந்த விழாவிற்காக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பிரமாண்ட இரும்பு பந்தல் அமைக்கப்பட்டு மின்சார அலங்காரம், மின்விசிறிகள் பொருத்தும் பணி நடைபெற்று வரும் நிலையில், விழா மேடைக்கு முதலமைச்சர் வந்து செல்லவதற்காக நல்ல நிலையில் இருக்கும் சாலையை மீண்டும் புதிய சாலையாக போடும் பணியும் நடைபெற்று வருகிறது.

கடலூர் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக இந்த மைதானமே தண்ணீரால் குளம்போல் சூழ்ந்து விழாவை நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இருப்பினும் எப்படியும் இந்த விழாவை நடத்தியே தீரவேண்டும் என மாவட்ட நிர்வாகம் முனைப்பு காட்டி இரவு, பகலாக பல்வேறு பணிகளை செய்து வருகிறது.

மஞ்சகுப்பம் பகுதியில் நடைபெறும் பணிகள்

குறிப்பாக மைதானத்தில் தேங்கியுள்ள மழை நீரை வெளியேற்ற மாவட்ட நிர்வாகம் மேற்கொண்ட அனைத்து நிகழ்ச்சிகளும் தோல்வியுற்றதால், மழைநீரை வெளியேற்ற வேறுவழியில்லாமல் தென்பெண்ணை ஆற்றில் இருந்து நூற்றுக்கணக்கான டிப்பர் லாரிகளில் மணலை எடுத்து வந்து கொட்டி சீர்செய்கின்றனர்.

தென்பெண்ணையாற்றில் மணல் குவாரி இயங்க உயர் நீதிமன்றம் தடை விதித்திருக்கும் நிலையில், முதலமைச்சர் பங்கேற்கும் நிகழ்ச்சிக்காக நீதிமன்ற உத்தரவை மீறி மணல் எடுத்து வருவது கண்டனத்துக்குரியது என சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். மேலும் இது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதையும் படிங்க:மொட்ட பெத்தான் கண்மாயில் திருட்டு மணல் பறிமுதல்!

Intro:முதல்வர் நிகழ்ச்சிக்காக பல்வேறு முறைகேடுகள். நீதிமன்ற தடையை மீறி மணல் அள்ளியது எப்படி. வெள்ளை அறிக்கை வெளியிட சமூக ஆர்வலர்கள் கோரிக்கை. Body:கடலூர்
நவம்பர் 23,

கடலூர் நகரின் வருகின்ற 25 ஆம் தேதி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்கக் கூடிய அரசு விழா நடைபெற உள்ளது. 2018 மஞ்சக்குப்பம் மைதானத்தில் எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சியார் மணி மண்டபம் அரசின் சார்பில் சுமார் இரண்டே கால் கோடி மதிப்பில் கட்டப்பட்டு கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அரசியல் காரணத்தால் திறப்புவிழா காணாமல் மூடிக் கிடந்தது தற்போது 25ம் தேதி முதல்வர் எடப்பாடி K.பழனிசாமி தலைமையில் இந்த மணிமண்டபத்தை திறக்கபட உள்ளது. அதற்கான விழா ஏற்பாடுகள் கடலூர் மஞ்சநகர மைதானத்தில் பல்வேறு விதிமுறை மீறல்களுடன் நடைபெற்று வருகிறது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்கக் கூடிய இந்த விழாவிற்காக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பிரம்மாண்ட இரும்பு பந்தல் அமைக்கப்பட்டு மின்சார அலங்காரம், மின்விசிறிகள் பொருத்தும் பணி, ஒரு புறம் நடைபெற்று வரும் நிலையில் விழா மேடைக்கு முதல்வர் வந்து செல்ல நல்ல நிலையில் இருக்கும் சாலை மீது மீண்டும் புதிய தார் சாலை போடப்படுகிறது அதுவும் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் சாலை போடும் பணி நடைபெறுகின்றது.கடலூர் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக இந்த மைதானமே தண்ணீரால் குளம் போல் சூழ்ந்து விழாவை நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது இருப்பினும் எப்படியும் இந்த விழாவை நடத்திய தீரவேண்டும் என மாவட்ட நிர்வாகம் முனைப்பு காட்டி இரவு பகலாக பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது விழா பந்தலில் தேங்கியுள்ள மழை நீரை வெளியேற்ற மாவட்ட நிர்வாகம் இரவு பகலாக பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டும் தொடர் மழை காரணத்தால் தோல்வியை தழுவியதால் வேறுவழியில்லாமல் நூற்றுக்கணக்கான டிப்பர் லாரிகளில் தென்பெண்ணை ஆற்றின் மணலை தண்ணீர் தேங்கியுள்ள பகுதியில் பரப்பி வருகிறார்கள் கடலூர் மாவட்டத்தில் தற்போது மணல் குவாரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது மேலும் தென்பெண்ணையாற்றில் மணல் குவாரி இயங்க உயர் நீதிமன்றம் தடை விதித்திருக்கும் நிலையில் மாட்டுவண்டி மணல் குவாரிகளும் மூடப்பட்டுவிட்டன இதனால் மாவட்டத்தில் கடுமையான மணல் தட்டுப்பாடு ஏற்பட்டு கட்டுமான பணிகள் முற்றிலும் முடங்கியுள்ள நிலையில் அரசு சார்பில் ஏழை எளிய மக்களுக்கு வீடு கட்டும் திட்டம் கழிப்பறைகள் கட்டும் திட்டம் மற்றும் அரசு கட்டிடங்கள் கட்டும் பணி என எவற்றுக்கும் மணல் கிடைக்காமல் முடங்கிக் உள்ளது. மணலை எதிர்பார்த்து விண்ணப்பிக்கும் பொதுமக்களுக்கு அரசு எம்சாண்ட் ஐ பயன்படுத்தி கட்டுமான பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்துகிறது.ஆனால் முதல்வர் பங்கேற்கவுள்ள ஒரு மணி நேரம் மட்டுமே நடைபெறக்கூடிய மணிமண்டப திறப்பு விழாவிற்காக மாவட்ட நிர்வாம் நீதிமன்ற தடையை மீறி,விதிமுறைகளை கடைபிடிக்காமல் நூற்றுக்கணக்கான லாரிகளில் ஆற்று மணலை அள்ளி வந்து மலைபோல் குவித்து மழைநீரில் பரப்பி வருகிறார்கள்.பொது மக்கள் வரிப்பணத்தில் இரண்டேகால் கோடி மதிப்பில் கட்டப்பட்ட மணிமண்டபம் திறப்பு விழாவிற்கு அதற்கு ஈடான தொகையை மக்கள் வரிப்பணத்தை வாரி இறைத்து வீண் செலவை மாவட்ட நிர்வாகம் செய்வதாக குற்றம் சாட்டும் பொதுமக்கள் இதுகுறித்து வெள்ளை அறிக்கை வெளியிட்ட வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர். பல்வேறு முக்கிய நிகழ்ச்சிகளை காணொளி மூலம் திறந்து வைக்கும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இந்த மணிமண்டபத்தை மட்டும் நேரில் வந்து திறந்து வைக்க முனைப்பு காட்டுவது அரசியல் லாபத்துக்காக மட்டுமே என்பது இதன் மூலம் தெளிவாக வெட்ட வெளிச்சமாகி உள்ளது என்பது பொது மக்கள் கருத்து தெரிவிக்கின்றனர். நகரில் வாழும் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கவனம் செலுத்த வேண்டிய மாவட்ட நிர்வாகம் அதில் முனைப்பு காட்டாமல் ஒரு மணிநேர விழாவிற்கு மட்டும் இத்தனை அக்கறை எடுத்து கடுமையான சவால்களை எதிர்கொண்டு விதிமுறைகளை எதையும் கடைபிடிக்காமல் அக்கறை காட்டுவது ஏன் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

பேட்டி - ராஜேஷ் - பொதுநல வாதி.கடலூர். . மணிவண்ணன் - பொதுநல வாதி.கடலூர்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.