ETV Bharat / state

திருமணத்தை நிறுத்திய மணப்பெண் - நஷ்டஈடு கோரி மணமகன் காவல் நிலையத்தில் புகார் - groom filed complaint against bride parents to police station

தன் திருமணத்தை வேண்டுமென்றே நிறுத்திய பெண் வீட்டார் மீது நடவடிக்கை எடுத்து நஷ்டஈடு தரக்கோரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மணமகன் புகாரளித்துள்ளார்.

groom filed complaint against bride parents to police station
அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மணமகன் புகாரளித்துள்ளார்
author img

By

Published : Jan 22, 2022, 6:46 AM IST

கடலூர்: பண்ருட்டி அருகே உள்ள பெரிய காட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீதர். இவர் பண்ருட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தன் திருமணத்தை வேண்டுமென்றே நிறுத்திய மணமகள் குடும்பத்தின் மீது நடவடிக்கை எடுத்து நஷ்ட ஈடு கேட்டு புகார் மனு அளித்துள்ளார்.

அப்புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது, பண்ருட்டியைச் சேர்ந்த ஜெயச்சந்தியா என்கிற பெண்ணுடன் தனக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டதாகவும், அதற்கு முன்பாக திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிகழ்வின் போது, பெண் வீட்டாரின் உறவினர் ஒருவர் மது அருந்தி விட்டு நடனம் ஆடியபோது இவ்வாறு செய்ய வேண்டுமெனக் கூறியதாக தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, மணப்பெண்ணின் பெற்றோர்கள், இப்போதே இவ்வாறு மிரட்டுவதாகக் கூறி பெண்ணை அழைத்துக் கொண்டு சென்று விட்டனர் என்று தனது புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் அப்பெண்ணுக்கும் வெறு ஒரு நபருக்கும் திருமணம் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.

இதனால், ஸ்ரீதர், தன் குடும்பத்தினர் மனவேதனை அடைந்துள்ளதாகவும், பெண் வீட்டார் மீது நடவடிக்கை எடுத்து நஷ்ட ஈடாக ரூ. 7 லட்சம் பணத்தை பெற்றுத் தருமாறும் புகாரளித்துள்ளார்.

இதையும் படிங்க: 3 தடுப்பூசி போட்டாச்சு; மாஸ்க் எதற்கு? தகராறு செய்த காவல் துறை அலுவலர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.