ETV Bharat / state

கடலூர் மாநகராட்சி: அவசர சட்டம் பிறப்பித்த தமிழ்நாடு அரசு

author img

By

Published : Oct 22, 2021, 3:55 PM IST

கடலூர் நகராட்சி மாநகராட்சியாக செயல்படுவதற்கான அவசர சட்டம் பிறப்பித்து தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்து உள்ளது.

TN
TN

சுமார் 2 லட்சம் மக்கள் தொகை கொண்ட கடலூர் நகராட்சியில் 45 வார்டுகள் உள்ளன. கடலூர் உள்ளாட்சி அமைப்புகள், நகர்ப்புறங்களுக்கு இணையான வளர்ச்சி பெற்று வளர்ந்த பகுதிகளாக உள்ளன.

அவ்வாறு வளர்ச்சி பெற்றுள்ள உள்ளாட்சி அமைப்புகளில் பாதாள சாக்காட்டைத் திட்டம், புதைவட மின்கம்பங்கள், குடிநீர் திட்டங்கள் உள்ளிட்ட சேவைகளை அரசு செயல்படுத்த இருக்கிறது.

அதனால் கடலூர் நகராட்சியைச் சுற்றியுள்ள வளர்ச்சி அடைந்த உள்ளாட்சிகளாக அடையாளம் காணப்பட்டு 22 உள்ளாட்சிகளை இணைந்து கடலூர் நகராட்சியை மாநகராட்சியாகத் தரம் உயர்த்தி நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு ஆகஸ்ட் மாதம் சட்டப்பேரவையில் அறிவித்தார்.

மாநகராட்சியாகத் தரம் உயர்த்தப்பட்ட பகுதிகள், மாநகராட்சி சட்டப்படி இயங்கவேண்டியுள்ளதால், கடலூர் மாநகராட்சிக்கான சட்டம் தற்போது இயற்றப்பட்டுள்ளது. தற்போது சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறாத நிலையில், அவசரச் சட்டமாக இயற்றி தமிழ்நாடு அரசு ஆணையை வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க: சரக்கு அடிக்க சைடு டிஸ் திருடும் இளைஞர்கள் - சிசிடிவி காட்சி...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.