ETV Bharat / state

மணல் கடத்துபவர் மீது குண்டாஸ் - ஆட்சியர் அதிரடி!

கடலூர்: வண்ணாத்தூர் அருகே மணல் கடத்தலில் ஈடுபட்டவரை மாவட்ட ஆட்சியர் ஓராண்டு குண்டர் தடுப்புக் காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.

Cuddalore
author img

By

Published : Nov 20, 2019, 8:36 PM IST

கடலூர் மாவட்டம் வண்ணாத்தூர் கிராமம் மணிமுத்தாற்றின் அருகே கடந்த 5ஆம் தேதி கிராம நிர்வாக அலுவலர் ராஜூ, கிராம உதவியாளர் காளிதாசன் இருவரும் மணல் திருடப்படுவது குறித்து சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அவ்வழியாக சந்தேகிக்கும் வகையில் வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது, லாரியில் மணல் கடத்தி வந்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அலுவலர்கள் வேப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், மணல் கடத்தி வந்தவர்கள் விருதாச்சலம் கச்சிபெருமாநத்தம் பகுதியைச் சேர்ந்த சிவசங்கரமூர்த்தி(35), பிரகாஷ்(33) என்பது தெரியவந்தது. மணல் கடத்தலில் முக்கிய குற்றவாளியான சிவசங்கரமூர்த்தி என்பவர் மீது ஏற்கனவே கடலூர், விழுப்புரம் மாவட்ட காவல் நிலையங்களில் மூன்று வழக்குகள் உள்ளன.

எனவே கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன், சிவசங்கரமூர்த்தியை ஓராண்டு காலம் குண்டர் தடுப்பு பிரிவு காவலில் வைக்க ஆணையிட்டார். தொடர்ந்து சிவசங்கரமூர்த்தி குண்டர் தடுப்பு காவலில் வைக்கப்பட்டார்.

இதையும் படிங்க: கடலூர் மாவட்டத்தில் மூன்றுபேர் மீது குண்டர் சட்டம்- காவல் துறை நடவடிக்கை!

Intro:மணல் கடத்தலில் ஈடுபட்டவர் குண்டர் தடுப்பு காவலில் கைதுBody:கடலூர்
நவம்பர் 20,

கடந்த 05ம் தேதி அதிகாலை கிராம நிர்வாக அலுவலர் ராஜூ மற்றும் கிராம உதவியாளர் காளிதாசன் ஆகியோர் மணல் கடத்தல் சம்மந்தமாக வண்ணாத்தூர் கிராமம் மணிமுத்தாறு ஆற்றில் கண்காணித்துக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த லாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையில் லாரியில் மணல் கடத்தியது தெரியவந்தது இதனையடுத்து கிராம நிர்வாக அலுவலர்கள் வேப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார் விசாரணையில் விருதாச்சலம் கச்சிபெருமாநத்தம் பகுதியைச் சேர்ந்த சேகர் என்பவரின் மகன் சிவசங்கரமூர்த்தி (35) மற்றும் அவரது கூட்டாளி பிரகாஷ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இதில் முக்கிய குற்றவாளியான சிவசங்கரமூர்த்தி என்பவரின் மீது ஏற்கனவே வேப்பூர் காவல் நிலையத்தில் 2 வழக்குகள் மற்றும் விழுப்புரம் மாவட்டம் எடைக்கல் காவல் நிலையத்தில் ஒரு வழக்கு உள்ளன. எனவே இவரின் குற்ற செய்கையை கட்டுப்படுத்தும் பொருட்டு கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீஅபிநவ் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் ஓராண்டு காலம் குண்டர் தடுப்பு காவலில் வைக்க ஆணையிட்டதின் பேரில் சிவசங்கர மூர்த்தி ஓராண்டு குண்டர் தடுப்பு காவலில் வைக்கப்பட்டார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.