ETV Bharat / state

நெய்வேலி என்எல்சி சுரங்கத்தில் தீ விபத்து - நெய்வேலி என்எல்சி நிறுவனம்

நெய்வேலி என்எல்சி நிறுவனத்தின் சுரங்கத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பல கோடி மதிப்பிலான இயந்திரம் தீப்பற்றி எரிந்தது.

என்எல்சி நிறுவனத்தின் சுரங்கத்தில் தீ விபத்து

author img

By

Published : Nov 8, 2022, 9:30 AM IST

கடலூர்: நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனம் திறந்தவெளி சுரங்கத்தின் மூலம் நிலக்கரி வெட்டப்பட்டு மின்சாரம் தயாரிக்கப்பட்டு வருகிறது. சுரங்கம் 1, சுரங்கம் 1A, சுரங்கம் 2 என மூன்று சுரங்கங்களில் இருந்து நிலக்கரி வெட்டப்பட்டு தயாரிக்க கூடிய மின்சாரம் தமிழ்நாடு மட்டுமல்லாமல் கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் அனுப்பப்பட்டு வருகிறது.

இந்நிலையில் என்எல்சியில் உள்ள சுரங்கம் 1A - இல் நேற்று (நவ. 7) நள்ளிரவில் நிலக்கரியை சுரங்கத்திலிருந்து வெளியே கொண்டு வரும் கன்வேயர் பெல்ட் இயந்திரத்தில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட மின்கசிவால் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனால் வான் உயரத்திற்கு தீயானது பரவி, சுரங்கம் முழுவதும் புகை மண்டலமாக மாறியது.

என்எல்சி நிறுவனத்தின் சுரங்கத்தில் தீ விபத்து

சுரங்கத்தில் தீ விபத்து ஏற்பட்டதால், அப்பகுதியில் பணிபுரிந்த தொழிலாளிகள் அங்கிருந்து தலைதெறிக்க ஓடியதால், எவ்வித உயிர் சேதமும் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது. பின்னர் நெய்வேலி என்எல்சி தீயணைப்புத் துறையினர், விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் சுமார் 2 கோடி மதிப்பிலான கன்வேயர் பெல்ட் இயந்திரம் முற்றிலுமாக எரிந்து, சேதம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

தொடர்ச்சியாக நெய்வேலி என்எல்சி நிறுவனத்தின் சுரங்கத்தில் விபத்து ஏற்பட்டு வருகிறது. தொழிலாளர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் என அனைத்து சங்க தொழிலாளர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: பால், மின்சார கட்டணம், சொத்துவரி உயர்வை குறைக்க வேண்டும் - சி.மகேந்திரன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.