ETV Bharat / state

கடலூரில் போலி நகை விற்க முயன்ற மூவர் கைது - மூன்று பேரை கைது செய்த காவல்துறை

கடலூர்: செராமிக் கடை உரிமையாளரிடம் தங்கம் என்று கூறி போலி நகைகளை விற்க முயன்ற வடமாநில இளைஞர் உட்பட மூவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

police arrested three person
author img

By

Published : Oct 31, 2019, 10:13 AM IST

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே எம்ஆர்கே நகர் பகுதியைச் சேர்ந்தவர் அசோக்குமார். இவர் செராமிக் கம்பெனி நடத்தி வருகிறார். அங்கு ஒடிசாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் வேலை பார்த்து வருகிறார். இவரிடம் அடையாளம் தெரியாத மூவர், தங்களிடம் ஆறு கிலோ தங்க நகைகள் இருப்பதாகவும் அதை வாங்கி கொள்கிறாயா? என கேட்டுள்ளனர். அதற்கு அவர், தன்னிடம் அவ்வளவு தொகை இல்லை, கம்பெனி உரிமையாளரிடம் கேட்டுப் பார்ப்பதாக கூறியுள்ளார்.

கைது செய்யப்பட்ட வடமாநிலத்தவர்கள்

இதுகுறித்து, தனது உரிமையாளரிடம் அவர் கூறியுள்ளார். பின்னர் உரிமையாளர் அசோக்குமார், அடையாளம் தெரியாத மூவரிடம் பணம் கொடுக்க அவர்களை, எஸ்பிஐ பேங்க் அருகே சந்தித்துள்ளார்.

அப்போது, இந்த நகை அசல் தங்கம் தானா என்பது குறித்து பரிசோதித்த அசோக்குமார், அவைகள் போலி என தெரியவந்தது. இதனையடுத்து அசோக்குமார் ரகசியமாக விருத்தாசலம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். அதன் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு வந்த விருத்தாசலம் துணை காவல் ஆய்வாளர் இளங்கோவன், காவல் ஆய்வாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் போலி நகை கொடுத்த மூவரை சுற்றி வளைத்தனர்.

அப்போது, இருவர் தப்பியோடிய நிலையில் பிடிபட்ட ஒருவரிடம் விசாரணை நடத்தினர். அதில், அவர் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை சேர்ந்த சங்கர்லால்(36) என்பது தெரியவந்தது. மேலும் தப்பியோடிய இருவர், கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த மோகன், அவரது மகன் நாராயணன் என்று தெரியவந்தது.

இதையடுத்து, விருத்தாசலம் உட்கோட்ட குற்றப் பிரிவு துணை காவல் ஆய்வாளர் குமரேசன் தலைமையிலான குழுவினர், தப்பியோடிய இருவரையும் கொளஞ்சியப்பர் கோயில் பகுதியில் கைது செய்தனர்.

Intro:கடலூரில் போலி நகைகள் விற்பனை செய்ய முயன்ற வடமாநில வாலிபர்கள் கைது
Body:கடலூர்
அக்டோபர் 30,

கடலூர் மாவட்டம் விருதாச்சலம் அருகே எம் ஆர் கே நகர் பகுதியை சேர்ந்தவர் அசோக்குமார் செராமிக் கம்பெனி நடத்தி வருகிறார்.இவரிடம் ஒரிசாவை சேர்ந்த வாலிபர் ஒருவர் வேலை பார்த்து வருகிறார். இவரிடம் மர்மநபர்கள் மூன்று பேர் எங்களிடம் 6 கிலோ தங்க நகைகள் உள்ளது அதை வாங்கி கொள்கிறாயா? என இந்தியில் கேட்டுள்ளனர் அதற்கு அந்த வாலிபர் என்னிடம் அவ்வளவு பணம் இல்லை என் கம்பெனியில் உரிமையாளரிடம் கேட்டுப் பார்க்கிறேன் என்று கூறியுள்ளார்.பின்னர் அந்த வாலிபர் இதுகுறித்து தனது உரிமையாளரிடம் கூறியுள்ளார் இதனைத்தொடர்ந்து கடையின் உரிமையாளர் அசோக்குமார் அந்த மர்ம நபர்களிடம் பணத்தை தயார் செய்து கொண்டு போன் செய்கிறேன் என கூறி உள்ளார்.

கடையின் உரிமையாளர் அந்த மர்ம நபர்களிடம் பணம் தயார் எனக் கூறியுள்ளார். பின்னர் அவர்கள் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா அருகே உள்ள கடைவீதிக்கு வருமாறு கூறியுள்ளனர். அங்கு சென்ற கடையின் உரிமையாளர் இந்த நகை அசல் தங்கம் தானா என பரிசோதிக்க வேண்டும் என கூறியுள்ளார் பின்னர் அந்த நகையை பரிசோதித்த போது அவை போலி என தெரிந்தது.உடனே அவர் விருதாச்சலம் காவல் நிலையத்தில் ரகசிய தகவல் கொடுத்தார்.

ரகசிய தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த விருதாச்சலம் துணை காவல் ஆய்வாளர் இளங்கோவன் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் மற்றும் போலீசார் அந்த மர்ம நபர்களை சுற்றி வளைத்தனர். அப்போது மூன்று பேரில் இரண்டு பேர் தப்பி ஓடினர் பிடிபட்ட ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை சேர்ந்த சங்கர்லால் 36 என்பது தெரியவந்தது மேலும் அவரிடம் விசாரணை நடத்திய போது அவர் உடன் வந்தவர்கள் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த மோகன் மற்றும் அவருடைய மகன் நாராயண் என்பது தெரியவந்தது.

தப்பி ஓடியவர்களை விருதாச்சலம் உட்கோட்ட குற்றப் பிரிவு சப் இன்ஸ்பெக்டர் குமரேசன் தலைமையிலான குழுவினர் விரைந்து சென்று கொளஞ்சியப்பர் கோவில் பகுதியில் பதுங்கியிருந்த அவர்களை கைது செய்தனர். பின்னர் இவர்களை பிடித்த போலீசார் இது போன்ற வேறு ஏதும் சம்பவத்தில் ஈடுபட்டு உள்ளார்கள் வேறு எங்கும் இவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதா என விசாரணை நடத்துகின்றனர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.