கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் திமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. கடலூர் மக்களவைத் தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் திமுகவை சேர்ந்த டி.ஆர்.வி.எஸ். ஸ்ரீரமேஷ் போட்டிருக்கிறார்.
திமுக மேற்கு மாவட்ட செயலாளர் கணேசன் எம்எல்ஏ தலைமையில் நடந்த கூட்டத்தில், பரப்புரை செல்லும் இடங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. வேட்பாளர் வெற்றிக்கு அனைத்து கூட்டணி கட்சிகளும் ஒருங்கிணைந்து பாடுபட வேண்டும் என்றும், இந்தக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. இதில், திமுக கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
.