டாஸ்மாக் மூடல்
திருவள்ளுவர் தினமான ஜனவரி 17, குடியரசு தினமான ஜனவரி 26 ஆகிய தினங்களில் கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபான கடைகள், மதுபான கூடங்களில் மது விற்கப்படாமல் மூடப்பட்டிருக்க வேண்டும் என கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புசெல்வன் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் டாஸ்மாக் கடை மூலம் நடத்தப்படும் சில்லறை மதுபான கடைகளில் மேற்பார்வையாளர்கள், உணவக மதுக்கூடம் உரிமையாளர்கள் மேற்கண்ட இரண்டு தினங்களில் எந்தவொரு இடத்திலும் மது விற்பனை நடைபெறாது என்பதை உறுதி செய்ய வேண்டும்.
மீறினால் நடவடிக்கை
இதனை மீறி மதுக்கடைகளை திறந்து மதுவை விற்றாலோ, மது அருந்தும் கூடங்கள் திறந்துவைத்தாலோ, சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர்கள், டாஸ்மாக் பார் உரிமையாளர்கள், உணவக மதுக்கூடம் உரிமையாளர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அன்புசெல்வன் எச்சரித்துள்ளார்.
இதையும் படிங்க:பெண்கள் மட்டும் கலந்துகொள்ளும் நவீன ஜல்லிக்கட்டு!