கடலூர் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்தைக் கடந்துள்ளது. அதனைக் கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
மாவட்டத்தில் உள்ள கரோனா சிறப்பு சிகிச்சை மையங்களில் 2,060 படுக்கைகள் உள்ளன. கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில், கூடுதலாக கரோனா சிறப்பு சிகிச்சை மையங்களில் 2,525 படுக்கைகள் அடிப்படை வசதிகளை மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது.
கரோனா சிறப்பு சிகிச்சை மையங்களில் எடுக்கப்பட்ட அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சகாமுரி இன்று (செப்.2) நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
இதையும் படிங்க: குன்னூர் சிம்ஸ் பூங்காவை நவீனப்படுத்த திட்ட ஆய்வுப் பணிகள்