ETV Bharat / state

சாமி கும்பிட வந்த பெண்ணை அறைந்த தீட்சிதர்! - சிதம்பரம் கோயில்

கடலூர்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் வழிபட வந்த பெண்ணை, அங்கிருந்த தீட்சிதர் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Dikshitar who slapped the women
author img

By

Published : Nov 17, 2019, 12:02 PM IST

Updated : Nov 17, 2019, 3:50 PM IST

கடலூர் மாவட்டத்திலுள்ள சிதம்பரம் வஉசி தெருவைச் சேர்ந்த செல்வகணபதியின் மனைவி லதா(51), காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள ஆயங்குடி அரசு ஆரம்பச் சுகாதார நிலையத்தில் செவிலியராக பணியாற்றி வருகிறார். நேற்றிரவு லதா தனது மகனின் பிறந்த நாளையொட்டி நடராஜர் கோயிலுக்குச் சென்றுள்ளார்.

அப்போது நடராஜர் கோயிலுள்ள முக்குறுணி விநாயகர் சந்நிதியில் தனது மகன் பெயரில் அர்ச்சனை செய்யுமாறு தீட்சிதரிடம் கூறியுள்ளார். அப்போது தீட்சிதர் வெறும் தேங்காயை மட்டும் உடைத்து விட்டு, பழத் தட்டை கொண்டு வந்து கொடுத்ததாகத் தெரிகிறது.

சாமி கும்பிட வந்த பெண்ணை அறைந்த தீட்சிதர்

அர்ச்சனை செய்யாமல் ஏன் தேங்காயை மட்டும் உடைத்தீர்கள் என லதா, தீட்சிதரிடம் கேட்டுள்ளார். அதற்குத் தீட்சிதர் லதாவை ஆபாசமாகத் திட்டி, கன்னத்தில் அறைந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், அவர் சம்பவ இடத்திலேயே கீழே விழுந்துள்ளார்.

தீட்சிதரின் தாக்குதலில் காயமடைந்த லதா சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து தகவலறிந்த சிதம்பரம் நகர காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். தாக்குதலுக்குக் காரணமான தீட்சிதர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 'ரஜினி அரசியலுக்கு வருவது சாமி கையில் உள்ளது' - சத்தியநாராயண ராவ்!

Intro:சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு சாமி கும்பிட வந்த பெண்ணை தீட்சிதர்
தாக்கியதாக புகார். காயமடைந்த செவிலியர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதி. போலீசார் விசாரணைBody:கடலூர்
நவம்பர் 17,

சிதம்பரம் வஉசி தெருவைச் சேர்ந்தவர் செல்வகணபதி. இவரது மனைவி லதா(51). இவர் காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள ஆயங்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராக பணியாற்றி வருகிறார்.நேற்று இரவு லதா தனது மகனின் பிறந்த நாளையொட்டி நடராஜர் கோயிலுக்கு சாமி கும்பிட சென்றுள்ளார்.

அப்போது நடராஜர் கோயில் பிரகாரத்தில் உள்ள முக்குறுணி விநாயகர் சன்னதியில் தனது மகன் பெயரில் அர்ச்சனை செய்யுமாறு அங்கிருந்த தீட்சிதரிடம் கூறியுள்ளார். அப்போது தீட்சிதர் வெறும் தேங்காயை மட்டும் உடைத்து விட்டு, பழத்தட்டை திருப்பிக் கொண்டு வந்து கொடுத்ததாக தெரிகிறது. அர்ச்சனை செய்யாமல் ஏன் தேங்காயை மட்டும் உடைத்தீர்கள் என லதா, தீட்சிதரிடம் கேட்டுள்ளார். அதற்கு தீட்சிதர் லதாவை ஆபாசமாக திட்டி கன்னத்தில் அறைந்ததாக கூறப்படுகிறது.

இதனால் அவர் சம்பவ இடத்திலேயே கீழே விழுந்துள்ளார். பின்னர் கோயிலில் இருந்த பக்தர்கள் திரண்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த சிதம்பரம் நகர போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். நிலையில் தீட்சிதரின் தாக்குதலில் காயமடைந்த செவிலியர் லதா சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அப்போது அங்கு வந்த போலீசார் லதாவிடமிருந்து புகாரை பெற்றுக் கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

பேட்டிகள்

1. திருமதி. லதா, தாக்குதலுக்குள்ளானவர்.

2. திரு. செல்வகணபதி, லதாவின் கணவர்.Conclusion:
Last Updated : Nov 17, 2019, 3:50 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.