உலக மகளிர் தினம் மார்ச் 8ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், தருமபுரி மாவட்டம் பென்னாகரம் இந்தியன் வங்கி மற்றும் தனியார் தொண்டு நிறுவனம் இணைந்து மகளிரை போற்றும் வகையில் மகளிர் தின விழா கொண்டாடினர்.
இந்த நிகழ்ச்சியில் மகளிர் சுய உதவிக் குழுக்களில் உள்ள 210 பெண்களுக்கு ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான கடன் உதவிகள் இந்தியன் வங்கி சார்பில் வழங்கப்பட்டது. இதில் விவசாய பணி, சிறு தொழில் தொடங்குதல், கறவை மாடு - ஆடு வளர்ப்புக்காக பயன்படுத்த உள்ளனர்.
இந்நிகழ்ச்சியில் பென்னாகரம் காவல் துணை கண்காணிப்பாளர் மேகலா கடன் உதவிகளை வழங்கினார். மேலும் இதில் பென்னாகரம் இந்தியன் வங்கிக் கிளை மேலாளர் பூவேல், பென்னாகரம் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் கவிதா ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: புற்றாக மாறிய பைக்! சுகம் கண்ட பாம்பு!