மார்கழி, தை அமாவாசை நாள்களில் நீர்நிலைகளில் மூதாதையர்களுக்கு தர்ப்பணம் செய்வது வழக்கம். அதன்படி, தை அமாவாசையான இன்று (பிப். 11) நீர்நிலைகளில் பொதுமக்கள் தங்களது மூதாதையர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபாடு செய்து வருகின்றனர்.
அந்த வகையில், இன்று கடலூர் மாவட்டம் வெள்ளி கடற்கரையில் ஏராளமான பொதுமக்கள் வந்து காய்கறிகள், அரிசி, பருப்பு உள்ளிட்டவைகளை வைத்து படையலிட்டு கடலில் நீராடி மூதாதையர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.
இதேபோல், தேவனாம்பட்டினம் கடற்கரையில் ஏராளமான பொதுமக்கள் தங்கள் மூதாதையர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிப்பட்டனர்.
இதையும் படிங்க: அமாவாசையை முன்னிட்டு சுருளி அருவியில் குவியும் பக்தர்கள்: வனத் துறையினரின் தடையால் ஏமாற்றம்!