ETV Bharat / state

வங்கி அதிகாரிகள் அவமானப்படுத்தியதால் பெண் தற்கொலை

வங்கியில் கடனை திருப்ப செலுத்த முடியாமல் சிரமப்பட்ட பெண் ஒருவரை, அவரது வீட்டிற்குள் வந்து தரக்குறைவான வார்த்தைகளை கூறி அவமானபடுத்தியதால் அப்பெண் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்தார்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Aug 7, 2022, 11:03 AM IST

Updated : Aug 7, 2022, 2:35 PM IST

கடலூர்: கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே அனுபவம் பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ஜெயந்தி. இவருடைய கணவர் செல்வராஜ். இத்தம்பதியினர் அனுபவம் பட்டு கிராமத்தில் டீக்கடை மற்றும் சிறிய உணவகம் ஒன்றினை நடத்தி வந்தனர். இவர்கள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக, கடலூரில் உள்ள எக்விடாஸ் வங்கியில் கடன் வாங்கி வீடு கட்டியுள்ளனர். அந்த வீட்டின் பாதி கடன் கட்டி முடிக்கப்பட்ட நிலையில், வங்கி ஊழியர்கள் மேலும் டாப்-அப் செய்ய சொல்லி இத்தம்பதியினருக்கு தினமும் போன் செய்துள்ளனர்.

முதலில் மறுத்த இத்தம்பதியினர் பின்பு தன் மகளின் திருமணத்திற்காக அக்கடனை டாப்-அப் செய்துள்ளனர். இதனால் அக்கடனின் இஎம்ஐ தொகை மேலும் அதிகரித்துள்ளது. பின் இஎம்ஐ கட்ட முடியாமல் சிரமப்பட்ட ஜெயந்தி, கடந்த ஒரு மாதம் மட்டும் இஎம்ஐ கட்டவில்லை. இதனால் வங்கி ஊழியர்கள் பலமுறை ஜெயந்தியிடம் போன் செய்து பணத்தை கட்டும்படி கூறியுள்ளனர்.

மேலும், ஜெயந்தி கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் தன்னுடைய மகளுக்கு திருமணம் செய்து வைத்துள்ளததாக கூறப்படும் நிலையில், அதனால் தவணை கட்ட அதிகம் சிரமப்பட்டுள்ளார். கடந்த சில நாட்களாக வங்கி ஊழியர்கள் வீட்டிற்கு வந்து ஜெயந்தியை தரக்குறைவாக பேசி உள்ளனர். நேற்று முன்தினம் (ஆக. 5) மதியம் 3 மணியளவில் ஜெயந்தியின் வீட்டிற்கு வந்த வங்கி ஊழியர்கள், இரவு 8 மணிவரை வீட்டிற்குள்ளேயே அமர்ந்து தரக்குறைவான வார்த்தைகளால் அவரை அவமானப்படுத்தி உள்ளனர்.

தற்கொலை எதற்கும் தீர்வு அல்ல
தற்கொலை எதற்கும் தீர்வு அல்ல

இதனால், மனமுடைந்த ஜெயந்தி நேற்று நள்ளிரவு நேரத்தில் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் அவருடைய உடலை கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்பு குள்ளஞ்சாவடி காவல் நிலையத்தில் இதுகுறித்து புகாரும் அளித்தனர். இந்த புகாரை பெற்றுக்கொண்ட காவல் துறை இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.

மேலும், இதே வங்கியில் கடன் வாங்கிய மற்றோரு நபரை கடந்த வாரம் வங்கி மேலாளர் ஆனந்த மூர்த்தி தரக்குறைவாக பேசிய ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. கடலூர் மஞ்ச குப்பத்தை சேர்ந்த கடன் வாங்கியவரிடம், போனில் தொடர்பு கொண்டு ஏன் கடனை கட்டவில்லை என்று கேட்டதற்கு அவர் உடல்நிலை சரியில்லை என தெரிவித்துள்ளார். 'உடல்நிலை தானே உனக்கு சரியில்லை, இதயத்தில் என்ன பெரிய ஓட்டையா... பிச்சை எடுத்தாவது பணத்தைக் கட்டு’ என்று தரக்குறைவாக பேசியிருந்தார்.

வங்கி மேலாளர் தரக்குறைவாக பேசிய ஆடியோ

இதனால், மன உளைச்சலுக்கு உள்ளான அந்த நபர் கடலூர் காவல் கண்காணிப்பாளரிடம் இதுகுறித்து புகார் அளித்திருந்தார். இதற்கான விசாரணை ஒருபுறம் நடந்து கொண்டிருக்க அதே வங்கி ஊழியர்கள், ஜெயந்தியையும் அவமானப்படுத்தி தற்கொலைக்கு தூண்டிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: ஓசி பார்சல் தராத பரோட்டா மாஸ்டர் வெட்டிக்கொலை

Last Updated : Aug 7, 2022, 2:35 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.