ETV Bharat / state

கடலூரில் குண்டர் தடுப்புச் சட்டத்தில் இருவர் கைது

கடலூர் : மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் முக்கிய குற்றவாளிகளான இரண்டு பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சுந்தரி, விமல்ராஜ்
author img

By

Published : May 2, 2019, 9:21 AM IST

Updated : May 2, 2019, 12:07 PM IST

கடலூர் பாதிரிக்குப்பம் வண்டிப்பாளையம் சாலையில் ஏப்ரல் 23ஆம் தேதி திருப்பாதிரிப்புலியூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் குமாரய்யா மற்றும் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் மூன்று டிராக்டர் டியூப்களில் 1200 லிட்டர் கள்ளசாராயம் விற்றுக்கொண்டிருந்த வண்டிபாளையத்தை சேர்ந்த சுந்தரி (66) என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சுந்தரி மீது ஏற்கனவே திருப்பாதிரிப்புலியூர் காவல் நிலையத்தில் எட்டு வழக்குகளும் கடலூர் மதுவிலக்கு அமல் பிரிவு காவல் நிலையத்தில் ஏழு வழக்குகளும் உள்ளன.

இந்நிலையில், குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் பொருட்டு கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் பரிந்துரையின் பெயரில் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன், சுந்தரியை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார்.இதேபோன்று பள்ளி மாணவிகளை கேலி செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட விமல்ராஜ் என்பவரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

கடலூரில் குண்டர் தடுப்பு சட்டத்தில் இருவர் கைது

கடலூர்
மே 1,

கடலூர் பாதிரிக்குப்பம் வண்டிப்பாளையம் சாலையில் ஏப்ரல் 23ஆம் தேதி திருப்பாதிரிப்புலியூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் குமாரய்யா மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது அந்த பகுதியில் 3 டிராக்டர் டியூப்களில் 1200 லிட்டர் கள்ளசாராயம் விற்றுக்கொண்டிருந்த வண்டிபாளையத்தை சேர்ந்த சுந்தரி (66)என்பவரை போலீசார் கைது செய்தனர். இவர் மீது திருப்பாதிரிப்புலியூர் காவல் நிலையத்தில் 8 வழக்குகளும் கடலூர் மதுவிலக்கு அமல் பிரிவு காவல் நிலையத்தில் 7 வழக்குகளும் உள்ளன.மேலும் இவரின் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் பொருட்டு கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் பரிந்துரையின் பெயரில் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் சுந்தரியை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார்.

இதேபோல் கடந்த ஏப்ரல் ஒன்றாம் தேதி நெய்வேலியில் கல்லூரி சென்று கொண்டிருந்த மாணவிகளை அதே பகுதியைச் சேர்ந்த சகாயராஜ் என்பவரின் மகன் விமல்ராஜ் 25 ஆறுமுகம் என்பவரின் மகன் வெங்கடேசன் ஆகியோர் கேலி செய்து கொண்டிருந்தனர் இதனை ஆண்டாள் 48 என்பவர் தட்டி கேட்டுள்ளார் இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் ஆண்டாளின் வீட்டை சேதப்படுத்தி அவரை தகாத வார்த்தையால் திட்டி உள்ளனர். இதனை தொடர்ந்து ஆண்டாள் நெய்வேலி தெர்மல் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து புகாரின் அடிப்படையில் நெய்வேலி தெர்மல் காவல் நிலைய போலீசார் விமல்ராஜ் மற்றும் வெங்கடேசனை வழக்கு பதிவு செய்து கைது செய்தனர் மேலும் இதில் முக்கிய குற்றவாளியான விமல்ராஜ் மீது 5 வழக்குகள் உள்ளன எனவே இவரின் குற்றச்செயலை கட்டுப்படுத்தும் பொருட்டு கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் விமல் ராஜை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார்.

Last Updated : May 2, 2019, 12:07 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.