கடலூர் மாவட்டத்தில் அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் மண்டல போக்குவரத்து அலுவலக வளாகத்தில் இரண்டாவது நாளாக காத்திருப்புப் போராட்டம் நடத்தினர். அப்போது, "அரசு போக்குவரத்து கழகத்தை தனியாருக்கு தாரை வார்க்கக்கூடாது.
புதிய ஒப்பந்தத்தை உடனடியாக பேசி தீர்வு காண வேண்டும். தொழிலாளர்கள் பணம் ரூபாய் 8500 கோடியை உடனடியாக வழங்க வேண்டும். தொழிலாளர்களின் பணத்தில் நிர்வாகம் நடத்தக்கூடாது. ஆயிரம் நாள்களுக்கு மேல் பணிசெய்த தொழிலாளர்களை நிரந்தரப்படுத்த வேண்டும்.
ஓய்வுபெறும் தொழிலாளர்களை வெறும் கையுடன் அனுப்பக்கூடாது" என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். இந்தப் போராட்டத்திற்கு தொமுச தலைவர் பழனிவேல் தலைமை தாங்கினார்.
தொழிலாளர் விடுதலை முன்னணி பொதுச்செயலாளர் கருணாநிதி, சிஐடியு துணைத்தலைவர் பாஸ்கரன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
இதையும் படிங்க:ஆவடி மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்களின் பிச்சையெடுக்கும் போராட்டம்!