ETV Bharat / state

பணத்தை தவறவிட்ட மூதாட்டி: கண்டுபிடித்து ஒப்படைத்த காவல்துறையினர் - மூதாட்டி

கடலூர்: ஒரு லட்சம் ரூபாய் பணத்தை தவறவிட்ட மூதாட்டியிடம் பணத்தை கண்டுபிடித்து காவல் துறையினர் அவரிடமே ஒப்படைத்தனர்.

oldlady
author img

By

Published : Jul 19, 2019, 10:40 PM IST

கடலூர் துறைமுகம் பகுதியைச் சேர்ந்தவர் சிவபாக்கியம்(65). அவர் வைத்திருந்த ஒரு லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் பணத்தை மீன்பிடித் தளத்தில் தவறவிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து அவர் கடலூர் துறைமுகம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

அதன் பேரில் காவல்துறையினர் அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அப்போது கீழே கிடந்த பணத்தை எடுத்துச் சென்ற முருகேசன் என்பவரை அடையாளம் கண்டு அவரிடமிருந்து பணத்தை மீட்டு தவறவிட்ட மூதாட்டி சிவபாக்கியத்திடம் மீண்டும் பணத்தை ஒப்படைத்தனர்.

கடலூரில் ஒரு லட்சம் ரூபாய் பணத்தை தவற விட்ட மூதாட்டியிடம் பணத்தை ஒப்படைத்த காவலர்கள்

கடலூர்
ஜூலை 19,

கடலூர் துறைமுகம் பகுதியை சேர்ந்தவர் சிவபாக்கியம் (65). அவர் மீன்பிடித் தளத்தில் வைத்திருந்த ஒரு லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் பணத்தை தவறவிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து அவர் கடலூர் துறைமுகம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார் பின்னர் அதன் பேரில் சார் ஆய்வாளர் வெங்கடேசன் மற்றும் தனிப்பிரிவு ஏட்டு மாயவேல் ஆகியோர் அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். 

அப்போது கீழே கிடந்த பணத்தை எடுத்துச் சென்ற முருகேசன் என்பவரை அடையாளம் கண்ட போலீசார் அவரிடமிருந்து பணத்தை மீட்டு பணத்தை தவற விட்ட மூதாட்டி சிவபாக்கியமிடம் ஒப்படைத்தனர். காணாமல் போன பணத்தை கண்டுபிடித்துக் கொடுத்த காவலர்களை மூதாட்டி சிவபாக்கியம் நன்றி தெரிவித்தார்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.