நாடு முழுவதும் கரோனா இரண்டாவது அலை வீசிவருகிறது. இதனால் தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கின்றனர்.
அந்தவகையில், கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள புவனகிரியைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (44 . இவர் சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்துவந்தார்.
இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு வல்லம்படுகை சோதனைச்சாவடியில் பணியாற்றிக்கொண்டிருந்தபோது அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டது.
பின்னர் அவருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவமனையில் நேற்று முன்தினம் சேர்க்கப்பட்டார்.
இந்நிலையில், இன்று (ஏப். 27) அதிகாலை சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்தார். காவலரின் இறப்பு சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் உள்ள காவலர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: இரட்டை கொலை வழக்கில் வடமாநில இளைஞருக்கு ஆயுள் தண்டனை