ETV Bharat / state

உள்ளாட்சி வேட்பாளர்களிடையே மோதல்: வெளியான வீடியோ காட்சி!

author img

By

Published : Jan 5, 2020, 5:11 PM IST

Updated : Jan 5, 2020, 7:15 PM IST

கடலூர்: நெல்லிக்குப்பம் அருகே உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்ட இரு வேட்பாளர்களின் ஆதரவாளர்கள் காவல் நிலையம் எதிரே மோதிக்கொண்ட வீடியோ வெளியாகியுள்ளது.

இரு தரப்பினரும் மோதிக்கொள்ளும் காட்சி
இரு தரப்பினரும் மோதிக்கொள்ளும் காட்சி

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அடுத்த வெள்ளப்பாக்கம் ஊராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் சுசிலா தேவநாதன், அம்சலைகா தர்மராஜ் ஆகியோர் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு போட்டியிட்டனர்.

தேர்தலில், சுசிலா தேவநாதன் ஊராட்சி மன்றத் தலைவராக வெற்றி பெற்றார். இந்நிலையில், நேற்று மாலை திடீரென்று அடையாளம் தெரியாத சிலர் வெள்ளப்பாக்கம் பள்ளத்தெரு, மேட்டுத்தெரு பகுதிகளில் அதிரடியாக உள்ளே புகுந்து அங்குள்ள பொதுமக்கள் மீது சரமாரியாகக் கற்களை வீசித் தாக்கியுள்ளனர்.

அப்போது பெண்கள் அலறி அடித்துக் கொண்டு வீட்டிற்குள் ஓடியுள்ளனர். மேலும், நான்கு வீடுகள், பொருட்களை அடித்து உடைத்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். இதனைத் தொடர்ந்து தேவநாதன் தரப்பைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் நெல்லிக்குப்பம் காவல் நிலையம் முன்பு திரண்டு முற்றுகையிட்டனர். நடந்த சம்பவத்தைக் கூறி எங்களுக்கு பாதுகாப்பு உடனடியாக வழங்க வேண்டும் என ஆக்ரோஷமாகக் கூறினார்கள்.

இந்நிலையில், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் தர்மராஜ் ஆதரவாளர்கள் நெல்லிக்குப்பம் காவல் நிலையத்திற்குத் திரளாக வந்தனர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர், காவல் நிலையம் அருகே இருந்த கட்டைகளை எடுத்து இரு தரப்பினரும் மாற்றி மாற்றி தாக்கிக் கொண்டனர்.

இந்த காட்சி திரைப்படக் காட்சியை மிஞ்சும் அளவிற்கு காணப்பட்டதாக அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர். தற்போது அது தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் பரவி வருகிறது.

உள்ளாட்சி வேட்பாளர்களிடையே மோதல்: வெளியான வீடியோ காட்சி!

இதையும் படிங்க: மறுவாக்கு எண்ணிக்கை நடத்தக்கோரி இருவர் தீக்குளிக்க முயற்சி!

Intro:உள்ளாச்சி மன்ற தேர்தல் எதிரொலி.
நெல்லிக்குப்பம் அருகே இரு தரப்பினர் கடும் மோதல்.
போலீஸ் நிலையம் முன்பு திரண்டு இருதரப்பும் மோதிக் கொண்டதால் பரபரப்பு. 4 வீடுகள் சூறை ; 4 பேர் காயம் : போலீசார் குவிப்பு.Body:நெல்லிக்குப்பம் அடுத்த வெள்ளப் பாக்கம் ஊராட்சியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் சுசிலா தேவநாதன் மற்றும் அம்சலைகா தர்மராஜ் ஆகியோர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்டனர்.

இந்த நிலையில் சுசிலா தேவநாதன் ஊராட்சி மன்ற தலைவராக வெற்றி பெற்றார் . இந்த நிலையில் நேற்று மாலை திடீரென்று வெள்ளப்பாக்கம் பள்ளத்தெரு, மேட்டுத்தெரு பகுதியில் ஒரு சில மர்ம கும்பல் அதிரடியாக உள்ளே புகுந்து அங்குள்ள பொதுமக்கள் மீது சரமாரியாக கற்களை வீசினர். அப்போது பெண்கள் அலறி அடித்துக் கொண்டும், அழுது கொண்டும் வீட்டுக்குள் ஓடினார்கள். மேலும் விநாயகம் பிரகன் உள்ளிட்ட 4 வீடுகளின் ஓடுகள் மற்றும் பொருட்களை மர்ம நபர்கள் அடித்து உடைத்து தப்பித்து ஓடினார்கள். இதனை தொடர்ந்து தேவநாதன் தரப்பை சேர்ந்த நபர்கள் நெல்லிக்குப்பம் காவல் நிலையத்திற்கு 50 க்கும் மேற்பட்டோர் திரண்டு முற்றுகையிட்டனர். மேலும் நடந்த சம்பவத்தை கூறி எங்களுக்கு பாதுகாப்பு உடனடியாக வழங்க வேண்டும் என ஆக்ரோஷமாக கூறினார்கள்.

இந்த நிலையில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தர்மராஜ் ஆதரவாளர்கள் நெல்லிக்குப்பம் போலீஸ் நிலையத்திற்கு திரண்டு வந்தனர். அப்போது இரு தரப்பினரும் நேருக்கு நேர் பார்த்ததால் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் கடலூர் - நெல்லிக்குப்பம் சாலையிலே போலீஸ் நிலையம் முன்பு சாலை ஓரத்தில் இருந்த கட்டைகள் எடுத்து இரு தரப்பு சேர்ந்தவர்களும் மாற்றி மாற்றி தாக்கிக் கொண்டனர். இந்த காட்சி திரைப்படத்தில் வரக்கூடிய சினிமா காட்சியை மிஞ்சி காணப்பட்டது. தற்போது சமுகவலைதளங்களில் பரவி வருகிறது

இதுகுறித்து நெல்லிக்குப்பம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.Conclusion:
Last Updated : Jan 5, 2020, 7:15 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.