ETV Bharat / state

கடலூர் அருகே பட்டப்பகலில் கள்ளச்சாராய விற்பனை: காணொலி வைரல்! - cuddalore illegal liquor sale

கடலூர்: திருப்பாதிரிப்புலியூர் பகுதியில் அடையாளம் தெரியாத நபர்களால் பட்டப்பகலில் பாக்கெட் கள்ளச்சாராயம் விற்பனை செய்யும் காணொலிக் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

cuddalore-illegal-liquor-sale-video-got-viral-in-social-media
cuddalore-illegal-liquor-
author img

By

Published : Dec 13, 2019, 8:50 PM IST

கடலூரில் இருசக்கர வாகனத்தில் சென்று பாக்கெட் கள்ளச்சாராயம் விற்பனை செய்வது மீண்டும் முழுவீச்சில் நடபெற்றுவருகிறது. புதுச்சேரி மாநிலத்திலிருந்து கடலூருக்கு பல்வேறு வகையான மதுபாட்டில்கள், சாராயம் கடத்துவது தொடர் கதையாகிவருகிறது.

இந்நிலையில் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பகுதியில் இருசக்கர வாகனங்களில் சென்று கள்ளச்சாராயத்தை கூவிக்கூவி விற்பனை செய்யும் காணொலி காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

புதுச்சேரியிலிருந்து கள்ளச்சாராயம் கடத்திவரப்பட்டு கடலூரில் பல்வேறு பகுதிகளில் அடையாளம் தெரியாத நபர்கள் விற்பனை செய்துவருவதாக தெரிவித்த பொதுமக்கள், இது குறித்து காவல் துறையினர் கவனத்திற்கு கொண்டுசென்றும் இதனை அவர்கள் கண்டுகொள்ளவில்லை எனவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கள்ளச்சாராய விற்பனை: காணொலி வைரல்!

இதையும் படியுங்க: வனப்பகுதியில் சாராயம் பதுக்கல்: கண்டுபிடித்து அழித்த காவல்துறை!

Intro:கடலூரில் கலை கட்டும் கள்ளசாராய விற்பனை
Body:கடலூர்
டிசம்பர் 13,

கடலூரில் கலைகட்டும் பாக்கெட் கள்ளச்சாராயம் விற்பனை செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.

கடலூரில் இருசக்கர வாகனத்தில் சென்று பாக்கெட் கள்ளச்சாராயம் விற்பனை செய்வது மீண்டும் களைகட்டத் தொடங்கி இருக்கிறது. புதுச்சேரி மாநிலத்தில் இருந்து கடலூருக்கு பல்வேறு வகையான மதுபாட்டில்கள் மற்றும் கள்ளச்சாராயம் கடத்துவது தொடர் கதையாகி வருகிறது.

இந்நிலையில் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பகுதியில் இருசக்கர வாகனங்களில் சென்று கள்ளச்சாராயத்தை கூவிக்கூவி விற்பனை செய்து வரும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வைரல் ஆகி வருகின்றன.

புதுச்சேரியிலிருந்து கள்ளச்சாராயம் கடத்தி வரப்பட்டு கடலூரில் பல்வேறு பகுதிகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்த விற்பனை குறித்து காவல்துறையின் கவனத்திற்கு கொண்டு சென்றும் இதனை அவர்கள் கண்டுகொள்ளவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.