ETV Bharat / state

காவல் நிலையத்தை முற்றுகையிட்ட மின்வாரிய ஊழியர்கள்...!

கடலூர்: அதிமுக முன்னாள் அமைச்சரின் உறவினரை கைது செய்யக்கோரி மின்வாரிய ஊழியர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

கடலூர் மின்வாரிய ஊழியர்கள் காவல் நிலையம் முற்றுகை கடலூர் மின்வாரிய ஊழியர்கள் சாலை மறியல் போராட்டம் மின்வாரிய ஊழியர்கள் போராட்டம் Electricity Staff Police Station Protest
Electricity Staff Police Station Protest
author img

By

Published : Jan 9, 2020, 9:39 AM IST

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள நடராஜர் கோயிலில் இன்று தேர் திருவிழா நடைபெற உள்ளது. இதனால், மின்வாரிய ஊழியர்கள் சிதம்பரம் நான்கு வீதிகளிலும் மரங்களில் உள்ள கிளைகளை வெட்டி அப்புறப்படுத்தி வந்தனர். இந்நிலையில், கீழ வீதியில் உள்ள முன்னாள் அதிமுக அமைச்சர் செல்வி ராமஜெயம் மருமகன் மருந்து கடை வைத்துள்ளார்.

இந்த கடையின் முன்பு உள்ள மரத்தின் கிளைகளை பாலகிருஷ்ணன் என்ற மின்வாரிய ஊழியர் வெட்டி அப்புறப்படுத்தினார். அப்போது, ஏன் என்னுடைய அனுமதி இல்லாமல் என் வாசலில் உள்ள மரத்தை வெட்டுகிறீர்கள் என்று முன்னாள் அமைச்சரின் மருமகன் சத்தம் போட்டுள்ளார். இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து, செல்வி ராமஜெயத்தின் உறவினர் ரமேஷ், அவரது நண்பர்கள் முத்து உள்ளிட்ட ஐந்து பேர் கூட்டாக சேர்ந்து ஊழியர் பாலகிருஷ்ணனை சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்தாக கூறப்படுகிறது. இதுகுறித்து மின்வாரிய ஊழியர்கள் சிதம்பரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகார் அளித்திருப்பது முன்னாள் அமைச்சரின் மருமகன் மீது என்பதால் காவல் துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த மின்வாரிய ஊழியர்கள், காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். இதைத்தொடர்ந்து, ஊழியர்கள் சாலை மறியலிலும் ஈடுபட முயற்சித்தனர். தொடர்ந்து, காவல்துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர். மேலும் தாக்கப்பட்ட பாலகிருஷ்ணன் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதையும் படிங்க:

ஊசி செலுத்தியதும் உயிரிழந்த குழந்தை - மருத்துவமனையை முற்றுகையிட்ட உறவினர்கள்!

Intro:அதிமுக முன்னாள் அமைச்சரின் உறவினரை கைது செய்யக் கோரி காவல்நிலையம் முற்றுகைBody:சிதம்பரம் நடராஜர் கோயிலில் வரும் 9- ந்தேதி தேர் திருவிழா நடைபெறுகிறது. இதற்கு மின்சார வாரியத்தில் பணிபுரியும் ஊழியர்கள் சிதம்பரம் நான்கு வீதிகளிலும் மரங்களில் உள்ள கிளைகளை வெட்டிஅப்புறப்படுத்தி வந்தனர்.

இந்நிலையில் கீழ வீதியில் உள்ள முன்னாள் அதிமுக அமைச்சர் செல்வி ராமஜெயம் மருமகன் மருந்து கடை வைத்துள்ளார். இந்த கடையின் முன்பு உள்ள மரத்தின் கிளைகளை பாலகிருஷ்ணன் என்ற மின்சார ஊழியர் வெட்டி அப்புறப்படுத்தினார். அப்போது ஏன் என்னுடைய அனுமதி இல்லாமல் என் வாசலில் உள்ள மரத்தை வெட்டுகிறீர்கள் என்று முன்னாள் அமைச்சரின் மருமகன் சத்தம் போட்டுள்ளார். இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து செல்விராமஜெயத்தின் உறவினர் ரமேஷ் மற்றும் அவரது நண்பர்கள் முத்து உள்ளிட்ட ஐந்து பேர் கூட்டாக சேர்ந்து ஊழியர் பாலசந்தரை சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர் என கூறி மின்சார ஊழியர்கள் அனைவரும் ஒன்று திரண்டு சிதம்பரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரின் மீது நடவடிக்கை எடுக்காததால் காவல் நிலையத்தை மின்சார ஊழியர்கள் அனைவரும் முற்றுகையிட்டனர். இதைத்தொடர்ந்து அவர்கள் அனைவரும் சாலை மறியலிலும் ஈடுபட முயற்சித்தனர். அவர்களை காவல்துறையினர் சமாதானப்படுத்தினர். தாக்குதலுக்குள்ளான பாலகிருஷ்ணன் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.