நிவர் புயல் காரணமாக தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. குறிப்பாக கடலூர் மாவட்டத்தில் தேசிய பேரில் மீட்பு குழுவினர் வரவழைக்கப்பட்டனர்.
மேலும், தாழ்வான பகுதிகளில் வசித்துவந்த மக்கள் பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். புயல் பாதிப்பால் சாலையில் விழுந்துகிடந்த மரங்கள் உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டன. மின்சார துண்டிப்பு துரிதமாக சரிசெய்யப்பட்டது.
இந்நிலையில், நிவர் புயல் பாதிப்பில் சிறப்பாக பணியாற்றிய தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், அரசு அலுவலர்கள் ஆகியோர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சகாமுரி பிரியாணி விருந்து கொடுத்தார்.
தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் பங்கேற்றவர்கள் மாவட்ட ஆட்சியருக்கு நன்றி தெரிவித்தனர்.
இதையும் படிங்க: சினிமா பாணியில் திருடனை துரத்திப் பிடித்த சென்னை காவலர் - நெட்டிசன்கள் பாராட்டு