ETV Bharat / state

ஆற்றில் குளித்துக்கொண்டிருந்த விவசாயியை முதலை கடித்து கொன்ற பரிதாபம்! - farmer

கடலூர்: சிதம்பரம் அருகே ஆற்றில் குளித்துக்கொண்டிருந்த விவசாயியை முதலை இழுத்து சென்று கடித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜெயமணி
author img

By

Published : Apr 26, 2019, 8:53 AM IST

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே வல்லம்படுகை கிராமத்தை சேர்ந்தவர் ஜெயமணி(46) விவசாயி. இவர் வயலில் வேலை முடித்துவிட்டு நேற்று முன்தினம் (புதன்கிழமை) 24ஆம் தேதி இரவு பழைய கொள்ளிடம் ஆற்றின் கரையில் நின்று குளித்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக ஆற்றில் இருந்த முதலை ஜெயமணியை கடித்து இழுத்துள்ளது.

அப்போது, முதலையின் கடியை தாங்க முடியாமல் அலறியுள்ளார். கணவனின் அலறல் சத்தத்தை கேட்டு வயலில் வேலை பார்த்துக்கொண்டிருந்த முத்துலட்சுமி ஓடி வந்து பார்த்துள்ளார். அப்போது கணவனை முதலை கடித்து இழுத்து செல்வதை கண்டு கூட்சலிட்டுள்ளார்.

பின்னர், தகவலறிந்து வந்த சிதம்பரம் வட்டாட்சியர் ஹரிதாஸ்,வனத்துறையினர் ராஜேஷ்,முதலை பிடிப்பதில் பயிற்சி பெற்ற நந்திமங்கலம் ராஜி தலைமையிலான குழுவினர் மற்றும் கிராமத்திலுள்ள இளைஞர்களின் உதவியால் ஆற்றில் படகு மூலம் இறங்கி இரவு முழுவதும் ஜெயமணியின் உடலை தேடினர். இந்நிலையில், நேற்று (வியாழக்கிழமை) மாலை அவரது உடல் ஆற்றின் கரையோரம் ஒதுங்கியது.

பின்னர், அவரது உடலை மீட்டு சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். ஆற்றில் குளிக்கச் சென்ற விவசாயியை முதலை கடித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிதம்பரம் அருகே ஆற்றில் குளித்துக்கொண்டிருந்த விவசாயியை முதலை இழுத்து சென்று கடித்துக் கொன்றது 

கடலூர்
ஏப்ரல் 25,

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே பழைய கொள்ளிடம் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த விவசாயி முதலை இழுத்துச் சென்று கடித்துக் கொன்றது.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே வல்லம்படுகை கிராமத்தை சேர்ந்தவர் ஜெயமணி(46) விவசாயி. இவர் வயலில் வேலை முடிந்து விட்டு நேற்று இரவு பழைய கொள்ளிடம் ஆற்றின் கரையில் நின்று குளித்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக ஆற்றில் இருந்த முதலை ஜெயமணியை கடித்து இழுத்துள்ளது. அப்போது முதலையின் கடியை தாங்க முடியாமல் அலறியுள்ளார். கணவனின் அலறல் சத்தத்தை கேட்டு வயலில் வேலை பார்த்துக்கொண்டிருந்த முத்துலட்சுமி ஓடி வந்து பார்த்துள்ளார். அப்போது கணவனை முதலை கடித்து இழுத்து செல்வதை கண்டு அதே இடத்தில் நின்று கூட்சலிட்டுள்ளார்.

பின்னர்  தகவல் அறிந்து வந்த சிதம்பரம் வட்டாட்சியர் ஹரிதாஸ்,வனத்துறையினர் ராஜேஷ்,முதலை பிடிப்பதில் பயிற்சி பெற்ற நந்திமங்கலம் ராஜி தலைமையிலான குழுவினர் மற்றும் கிராமத்திலுள்ள இளைஞர்களின் உதவியால் ஆற்றில் படகு மூலம் இறங்கி இரவு முழுவதும் ஜெயமணியின் உடலை தேடினர். இன்று மாலை அவரது உடல் ஆற்றின் கரையோரம் ஒதுங்கியது. 

பின்னர் அவரது உடலை மீட்டு சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். ஆற்றில் குளிக்கச் சென்ற விவசாயியை முதலை கடித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.