கடலூர் மாவட்டம் முழுவதும் போர்க்கால அடிப்படையில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் தமிழ்நாடு அரசு, வரும் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது.
கடலூரில் நேற்று (ஆக. 19) வரை கரோனா தொற்றால் ஏழாயிரத்து 571 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று மேலும் 270 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஏழாயிரத்து 841ஆக உயர்ந்துள்ளது.
மேலும் இரண்டாயிரத்து 635 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கடலூர், விருத்தாசலம், சிதம்பரம் உள்ளிட்ட அரசு மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சத்தான உணவுகள் வழங்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மாவட்டத்தில் மேலும் 230 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் கடலூர் மாவட்டத்தில் சிகிச்சை முடிந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை நான்காயிரத்து 850ஆக உயர்ந்துள்ளது.
நேற்று வரை 87 பேர் உயிரிழந்த நிலையில், இன்று மேலும் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 89ஆக அதிகரித்துள்ளது.