கடலூர்: கடலூர் செம்மண்டலத்தை சேர்ந்தவர் ஜூலியன் குமார். இவர் நெய்வேலி தெர்மல் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வந்தார்.
இதற்கிடையே கடந்த சில நாள்களுக்கு முன்பு கரோனாவால் பாதிக்கப்பட்ட ஜூலியன் குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த அவருடன் 2003-ஆம் ஆண்டு காவலர் பயிற்சி பெற்ற தலைமை காவலர்கள் அனைவரும் ஒன்றிணைந்து டெலிகிராம் குழு மூலம் ஜூலியன் குமார் குடும்பத்துக்கு நிதி திரட்டி உதவி செய்ய முன்வந்தனர்.
அதன்படி ரூபாய் 25 லட்சத்து 14 ஆயிரம் நிதி திரட்டப்பட்டு கரோனாவால் உயிரிழந்த ஜூலியன் குமாரின் மனைவி மேரி மெல்பின் ராணியிடம் காவலர்கள் வழங்கினர்.
காவலர்களின் இச்செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. கரோனாவால் உயிரிழந்த ஜூலியன் குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் காவலர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.
இதையும் படிங்க: ஆதரவற்றவரின் உடலை அடக்கம் செய்த பெண் தலைமை காவலர்!