தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்த வண்ணம் உள்ளது. குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் கரோனா வைரஸ் வீரியமாக இருக்கிறது.
அந்த வகையில், கடலூரில் கரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை நேற்றுவரை 468 இருந்த நிலையில், இன்று சென்னை, தெலங்கானா பகுதியிலிருந்து வந்த ஏழு நபர்களுக்கு கரோனா தொற்று உறுதியானதையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 475ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தோரின் எண்ணிக்கை இரண்டாக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், கடலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மத்திய ஆய்வுக்குழுவை சேர்ந்த ஐஏஎஸ் அலுவலர் ராஜேந்திர ரத்னோ நேரில் சென்று ஆய்வு செய்தார். அதன்படி, முதல்கட்டமாக கடலூரில் தண்டபாணி நகர், புதுக்குப்பம் பகுதிகளில் மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.