ETV Bharat / state

கடலூரில் மூன்று ஆசிரியைகளுக்கு கரோனா!

கடலூர் மாவட்டத்தில் பள்ளிகள் திறந்து மூன்று நாள்களில் மூன்று ஆசிரியைகளுக்கு கரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டது மாணவ-மாணவிகளிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

ஆசிரியைகளுக்கு கரோனா!
ஆசிரியைகளுக்கு கரோனா!
author img

By

Published : Sep 3, 2021, 9:45 PM IST

கடலூர்: தமிழ்நாடு முழுவதும் செப்டம்பர் 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டு 9, 10, 11, 12 ஆகிய வகுப்புகள் சுழற்சி முறையில் நடத்தப்பட்டுவருகின்றன. இந்நிலையில் கடலூர் மாவட்டம் நெய்வேலி தனியார் பள்ளியில் இரண்டு ஆசிரியைகளுக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டது.

இதையடுத்து, ஆசிரியை பாடம் எடுத்த மாணவ, மாணவிகளுக்குப் பரிசோதனை செய்ய பள்ளி நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. பள்ளியைத் தூய்மை செய்யும் பணிகள் தற்போது நடைபெற்றுவருகின்றன. நேற்று கடலூரில் அரசுப் பள்ளி ஆசிரியை ஒருவர் கரோனாவால் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மூன்று ஆசிரியைகளுக்கு கரோனா
மூன்று ஆசிரியைகளுக்கு கரோனா

இதனால் கடலூர் மாவட்டத்தில் மூன்று ஆசிரியைகள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இது மாணவ-மாணவிகளிடமும், பெற்றோர்களிடமும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் பணி செய்த பள்ளியில் மருத்துவக் குழுவினர் ஆசிரியர்களுக்கு பரிசோதனை செய்தனர். மேலும் நிர்வாகத்தின் சார்பில் அனைத்து வகுப்புகளையும் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்தனர்.

இதையும் படிங்க : தமிழ்நாட்டில் உயரும் கரோனா: பள்ளிகளின் நிலை என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.